உங்கள் கைகள் மற்றும் கால்களுக்கான சரியான குளிர்கால பராமரிப்பு!

குளிர்காலத்தில் உங்கள் கைகளையும் கால்களையும் அரவணைத்து, அவர்களுக்குத் தேவையான கவனத்தையும் ஊட்டச்சத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம். அதுக்கு உதவும் சில குறிப்புகள் இங்கே:

winter skin care tips
Keep your hands and feet moisturizing with these effective tips during winter

ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குளிர் மாதங்கள் ஆரம்பித்து விட்டன. நீங்கள் அனைவரும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்கவும், படுக்கையில் வசதியாக இருக்கவும் விரும்பினாலும், உங்கள் சருமத்தை நன்கு கவனித்துக்கொள்வதும் மிகவும் முக்கியம். இந்த நேரத்தில், நாங்கள் உங்கள் முகத்தைப் பற்றி மட்டுமல்ல, உங்கள் கைகளையும் கால்களையும் பற்றி பேசுகிறோம். கை, கால்களை கவனிக்காமல் விட்டால், தோல் வறண்டு, அரிப்பு ஏற்படும். சிறிது நேரத்தில், உங்கள் சருமம் மந்தமாகவும், உயிரற்றதாகவும் மாறியிருப்பதை உணருவீர்கள். அதனால்தான் குளிர்காலத்தில் உங்கள் கைகளையும் கால்களையும் அரவணைத்து, அவர்களுக்குத் தேவையான கவனத்தையும் ஊட்டச்சத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம். அதுக்கு உதவும் சில குறிப்புகள் இங்கே:

சாக்ஸ் மற்றும் முழு கை சட்டை

உங்கள் சென்சிட்டிவான சருமத்திற்கு குளிர் தாங்க முடியாததாக இருந்தால், சாக்ஸ் மற்றும் முழு கை ஆடைகளை அணிந்து உங்கள் கைகளையும் கால்களையும் சூடாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சாக்ஸ் உங்கள் குதிகாலை ஈரப்பதமாக வைத்து, வெடிப்பு ஏற்படாமல் இருக்க உதவும். அதே வேளையில் ஃபுல் ஸ்லீவ் டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்கள் உங்கள் கைகள் சூடாக இருக்க உதவும்.

ஆல்கஹால் இல்லாத பொருட்கள்

குறிப்பாக குளிர்காலத்தில், சிறிய அளவிலான ஆல்கஹால் உள்ள எந்தவொரு தயாரிப்புகளையும் தவிர்க்கவும். ஆல்கஹால் அடிப்படையிலான தயாரிப்புகள் உங்கள் சருமத்தை வறட்சியடைய செய்து, அரிப்பு ஏற்படுத்தும். எனவே, நீங்கள் முதலீடு செய்யும் பொருட்களில் ஆல்கஹால் உள்ளதா என்று எப்போதும் பொருட்களின் பட்டியலைச் சரிபார்ப்பது நல்லது.

மனிக்யூர் மற்றும் பெடிக்யூர்

குளிர் மாதங்களில் கை நகங்கள் மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான சிகிச்சையை தவறாமல் செய்துகொள்வது, உண்மையில், உங்கள் கைகள் ஈரப்பதமாகவும் ஊட்டமாகவும் உணர உதவும். எனவே நீங்கள் நகங்கள் மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான காரணங்களை கண்டுபிடித்து,அதற்கான சரியான சிகிச்சை அளிக்கவும்.

க்யூட்டிகல் பராமரிப்பு

குளிர்காலத்தில் உங்கள் க்யூட்டிகல்ஸ் (கை மற்றும் கால் விரல் நகங்களின் அடிப்பகுதியிலுள்ள கடினமான தோல்பகுதி) காய்ந்துவிடும். எப்பொழுதும் க்யூட்டிகல் ஆயிலைப் பயன்படுத்துங்கள், குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்க, உங்கள் நகங்களைச் சுற்றியுள்ள சருமத்தையும் கவனிப்பது முக்கியமானது.

வசதியான காலணிகள்

இந்த குளிர்காலத்தில் வசதியான காலணிகளில் முதலீடு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் காற்று மற்றும் சூரிய ஒளிக்கு பதிலாக உங்கள் கால்களை சூடாகவும், மூடியதாகவும் வைத்திருக்கும் வகையிலான காலணிகளை தேர்ந்தெடுக்கவும். சங்கடமான காலணிகள் உங்கள் கால்களை குளிர்ச்சியாகவும், உலர்ந்ததாகவும், எளிதில் வெடிக்கவும் செய்யும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Keep your hands and feet moisturizing with these effective tips during winter

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com