ஆரோக்கியமான நகங்கள் நமது உடல் சுகாதாரத்தின் பிரதிபலிப்பாகும். ஆரோக்கியமான நகங்களுக்கு உரிய பராமரிப்பு செய்வது அவசியம். அதற்கு நகங்களுக்கு சரியான கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சீரான உணவைப் பழக்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
கைகளை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும். நக கண்களில் அடிப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தால் நகம் செழிப்பாக இருக்கும்.
இவை எல்லாம் எப்போதும் நம் அன்றாடம் கடைபிடிக்க கூடியவை தான். இவற்றை பின்பற்றினாலே ஆரோக்கியமான நகத்தை வளர்க்கலாம்.
நகம் என்பது நமது உடலின் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி ஆகும். உடலின் உள் உறுப்புகளில் பிரச்சனை உள்ளது என்பதை நமது நகத்தை வைத்தே அறியலாம். எனென்றால் இது விரலில் கவசம் ஆகும்.
நகம் கீழ் இருக்கும் கை விரல் வீக்கம் அடைந்தால் உடல் உள் உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.
ஏன் நகங்கள் உங்கள் உடல் நலத்தின் கண்ணாடி ?!
கல்லீரல், செரிமான கோளாறு, இதயம் சார்ந்த பிரச்சனை, புற்றுநோய் என பல பிரச்சனைகளின் அறிகுறிதான் இந்த வீக்கம் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
அதேபோல சிலர் அழகுக்காக நகத்தை நீளமாக வளர்ப்பதுண்டு ஆனால் அதுவும் மிகப்பெரிய ஆபத்து என்கிறார். எனவே நகம் ஆரோக்கியத்தை வைத்தே நம் உடல் ஆரோக்கியத்தை அறியலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.