Advertisment

‘டேஸ்ட்டி’ கீரை சப்பாத்தி: குழந்தைகளுக்கு புடிக்கிற மாதிரி செய்யுங்க!

டேஸ்டான சப்பாத்தியுடன் சத்தான கீரையை இணைத்தால், சத்தும் சுவையும் நிரம்பிய கீரை சப்பாத்தி செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘டேஸ்ட்டி’ கீரை சப்பாத்தி: குழந்தைகளுக்கு புடிக்கிற மாதிரி செய்யுங்க!

Keerai Chapati recipe in tamil, Keerai Chapati making video: கீரை, நம் உடல் நலனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வெறுமனே கீரையை சாப்பிட குழந்தைகள் அவ்வளவாக விரும்புவதில்லை. அப்படியானால் அவர்கள் விரும்புகிற மாதிரி கீரையை வழங்குவதான் உசிதம்!

Advertisment

அப்படியொரு ரெசிபிதான் கீரை சப்பாத்தி. டேஸ்டான சப்பாத்தியுடன் சத்தான கீரையை இணைத்தால், சத்தும் சுவையும் நிரம்பிய கீரை சப்பாத்தி செய்யலாம். இதை சுலபமாக செய்வது எப்படி என இங்கு காண்போம்.

keerai Chapati making: குழந்தைகளுக்கு பிடித்தமான கீரை சப்பாத்தி

கீரை சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்கள்: கீரை - ஒரு கட்டு, கோதுமை மாவு - 2 கப், தண்ணீர் - தேவையான அளவு, சீரகம் - 1/4 தேக்கரண்டி, உப்பு - சிறிதளவு, வெங்காயம் - 1, எண்ணெய் - 2 டீ ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

கீரை சப்பாத்தி செய்முறை : கீரையை நீரில் அலசி, பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். கோதுமை மாவுடன் கீரை, வெங்காயம், ப.மிளகாய், சீரகம், உப்பு, கரம்மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பதத்திற்கு பிசைந்து மாவை ஒரு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

பிறகு மாவை சப்பாத்தி போல் தேய்த்து வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விடவும்.

கீரை வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், எண்ணெய் விட்டு இரு புறங்களிலும் மாறி மாறி வேக விட வேண்டும்.

கீரைச் சப்பாத்தி செய்யும் போது பாதி வெந்ததும் அடுப்பில் நேரடியாக இரு புறமும் சுட வைத்துக் கல்லில் போட்டு எண்ணெய் தடவலாம். எண்ணெய் தடவி விட்டுத் தணலில் காட்டக் கூடாது. அப்பளம் போல ஆகி விடும். இந்த முறையில் செய்தால் டேஸ்டான கீரை சப்பாத்தி தயார். இதைச் செய்து ருசித்து மகிழுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment