Advertisment

ஹெல்தி, டேஸ்டி; கீரை சேர்த்த தேங்காய்ப் பால் சூப்: இப்படி செய்யுங்க

கீரை தேங்காய்ப் பால் ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Keerai coc.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆரோக்கியமான, சுவையான கீரை தேங்காய்ப் பால் ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

கீரை – ஒரு கட்டு
சின்ன வெங்காயம் – 7
சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப் பால் – 1 கப்
பூண்டு – 4 பல்
உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சுத்தம் செய்த கீரை, பூண்டு, வெங்காயம், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றைக் குக்கரில் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி, மூன்று விசில் விட்டு இறக்கவும். 

இப்போது இந்த கலவை ஆறிய பின் மசிக்கவும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கீரைக் கலவை, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து நிறுத்தவும். அவ்வளவு தான் சூப்பரான கீரை தேங்காய்ப்பால் சூப் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment