பழங்காலத்திலிருந்தே, கீரைகள் இந்திய உணவு வகைகளில் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகின்றன. கீரையின் ஊட்டச்சத்து அடர்த்தி, அதன் ருசியான சுவை ஆகியவை இதை மிகவும் தனித்துவமாக்குகிறது., கீரையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், ஆயுர்வேதம் உணவில் கீரையை அதிகம் சேர்ப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
கீரையை அதிகமாக உட்கொள்வதால் வாயு, அமிலத்தன்மை மற்றும் வீக்கம் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. கீரை சாப்பிடுவதால் உடலில் நச்சு உருவாகிறது, இது செரிமானம் மற்றும் கல்லீரல், தோல், சுவாச அமைப்பு ஆகியவற்றை பாதிக்கிறது மற்றும் அடிக்கடி மூட்டு வலிகளைத் தூண்டுகிறது.
பெரும்பாலான கீரைகள் வாத பண்புகளைக் கொண்டுள்ளன, எனவே அவற்றை மிதமாக உட்கொள்வது சிறந்தது. இது கீரைகளின் நன்மைகளை உடல் எடுத்துக் கொள்ள உதவுகிறது.
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, உணவை ஜீரணிக்க, உடலுக்கு அதிக திறன் உள்ள பகல் நேரத்தில் கீரை சாப்பிடுவது சிறந்தது.
ஆயுர்வேதம் படி கீரை சமைப்பது எப்படி?
3-4 நிமிடங்கள் ஓடும் நீரின் கீழ் கீரையை கழுவவும். தண்ணீரை வடிகட்டி, சாதாரண வெப்பநிலையில் கீரையை உலர வைக்கவும்.
அடுத்து, கீரையின் தண்டை அகற்றவும். பிறகு, கீரையை சிறிய துண்டுகளாக நறுக்கவும், அதனால் அது கொதிக்க அல்லது சமைக்க குறைந்த நேரம் எடுக்கும்.
கீரை சமைக்க சில நிமிடங்கள் மட்டுமே ஆகும், சில வகையான இலை கீரைகள் சமைக்க 30 நிமிடங்கள் வரை ஆகலாம்.
அடுத்து, ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் வெதுவெதுப்பானதும், அதில் நறுக்கிய கீரையைச் சேர்த்து, 5-10 நிமிடங்கள் சமைக்கவும், அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும்.
ஆயுர்வேதத்தின்படி கீரையில் நச்சு தாக்கத்தைக் குறைக்க, வாத தாக்கத்தைத் தணிக்கும் மசாலாப் பொருள்களைச் சேர்ப்பதே சிறந்த வழி.
மஞ்சள், திப்பிலி, சீரகம், கொத்தமல்லி இலை, வெந்தய இலை போன்ற மசாலாப் பொருட்கள் நச்சு தாக்கத்தைக் குறைக்க உதவும் சில மசாலாப் பொருட்களாகும். மேலும் திப்பலி சேர்ப்பது வாதம், பித்தம் மற்றும் கபத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. கீரையை சாப்பிடுவதற்கு முன் அதை நன்றாக சமைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“