ருசியான அரைக்கீரை கடையல்; ஆரோக்கியமான ”லஞ்ச்க்கு” இதைவிட வேறென்ன வேணும்?

Arai keerai kadaiyal in Tamil: ஏகப்பட்ட நன்மைகளை உள்ளடக்கியுள்ள அரைக்கீரையில் எப்படி கடையல் செய்யலாம் என்பது பற்றி இங்கு பாப்போம்.

Keerai kadayal recipe in Tamil: easy steps to make Arai keerai kadaiyal

Keerai kadayal recipe in Tamil: இந்திய உணவு கலாச்சாரம் மருத்துவ குணம் வாய்ந்தது. இவற்றில் நாம் பயன்படுத்தும் மசாலா பொருள்கள் முதல் பருப்பு, தானிய வகை என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அந்த வகைகள் நமக்கு எளிதில் கிடைக்ககூடிய உணவு பொருளாக உள்ள கீரையை இவற்றில் இருந்து தவிர்த்து விட முடியாது. ஏனென்றால், கீரையில் ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிரம்பியுள்ளன. இதில் அரைக்கீரை முக்கியமானதாக உள்ளது.

அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உடலில் காணப்படும் தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கியுள்ள அரைக்கீரையில் எப்படி கடையல் செய்யலாம் என்பது பற்றி இங்கு பாப்போம்.

தேவையான பொருட்கள்


அரைக்கீரை
துவரம் பருப்பு – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
மஞ்சள் தூள்
அரிசி கலைந்த தண்ணீர்
சீரகப்பொடி
பூண்டு – 6-7
வெங்காயம் – 1/2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 5
சமையல் எண்ணெய் – சிறிதளவு

தாளிக்க

எண்ணெய்
கடுகு
சீரகம்
காய்ந்த மிளகாய்
உப்பு
பெருங்காயம்

செய்முறை

முதலில் ஒரு கட்டு அரைக்கீரை எடுத்து அரிந்து கொள்ளவும். பிறகு தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ளவும்.

இப்போது ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து, அதில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், அரிசி கலைந்த தண்ணீர், சீரகப்பொடி, பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சமையல் எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும். குக்கர் என்றால் 3 முதல் 4 விசில் போதுமானது.

அவற்றை கொதிக்க வைத்து ஆற வைத்த பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். இவற்றை சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். பிறகு அரிந்து வைத்துள்ள கீரையையும் சிறிதளவு எண்ணெயையும் அதில் சேர்க்கவும். தொடர்ந்து சிறிய அல்லது கரண்டியின் பின் புறத்தை வைத்து கிளறவும். கிளறுவதை குறைந்து பட்சம் 15 நிமிடங்களுக்கு தொடரவும்.

இப்போது இதற்கு சுவையை கூட்டும் தாளிப்பிற்கு, ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளிக்கவும்.

பிறகு முன்னர் வேக வைத்துள்ள கீரையில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து, பருப்பு கடைவது போல் கடையவும். அதன்பின்னர் இந்த தாளிப்பை அதில் சேர்த்து கிளறவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த ருசியான அரைக்கீரை கடையல் தயராக இருக்கும். அவற்றை உங்கள் உணவுகளுடன் பரிமாறவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Keerai kadayal recipe in tamil easy steps to make arai keerai kadaiyal

Next Story
தயிர் மட்டும் போதும்… இட்லி- தோசைக்கு சூப்பரான சட்னி ரெடி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express