ஒரு முறை இப்படி கீரைக்கூட்டு செய்து பாருங்க. ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரை டம்ளர் பச்சை பயறு
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
சிறு கீரை ஒரு கட்டு நறுக்கியது
5 பல் பூண்டு
3 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் தேங்காய் துருவல்
1 ஸ்பூன் மல்லித்தூள்
அரை ஸ்பூன் சீரகத்தூள்
தேவையான அளவு உப்பு
செய்முறை : பச்சை பயறை, தண்ணீர், மஞ்சள் பொடி சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிய அளவு தண்ணீர் சேர்த்து, அதில் நறுக்கிய சிறு கீரையை சேர்க்கவும். தொடர்ந்து அதில் பூண்டு, பச்சை மிளகாய் நறுக்கியதை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் தேங்காய் துருவல், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், அவித்த பச்சை பயறை சேர்த்து, கிளரவும். தொடர்ந்து 10 நிமிசங்கள் மூடி போட்டு மூடவும். சூப்பரான கீரைக் கூட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“