மிகவும் சத்தான கீரைக்கூடு ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்: அரை கீரை (அ) பசலை கீரை - 1 கட்டு, துவரம் பருப்பு - 1 கப், எண்ணெய் - 1 டீ ஸ்பூன், சீரகம் - 1/2 டீ ஸ்பூன், பூண்டு- 5 பற்கள், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 4, தக்காளி - 1, சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன், மஞ்சள் - 1/4 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை: எண்ணெய் - 2 டீ ஸ்பூன், கடுகு - 1/2 டீ ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத் தூள் - 1/2 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2
செய்முறை : துவரம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, பிறகு 4 விசில் வரும்வரை குக்கரில் வேக வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து வதக்குங்கள். அதோடு சாம்பார் பொடி, மஞ்சள் சேருங்கள். நன்கு வதங்கி கீரை சுருங்கியதும் வேக வைத்த பருப்பை ஊற்றுங்கள். இதனை கிளறிவிட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிடுங்கள். பின் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கீரையில் கொட்டுங்கள். இப்போது சுவையான கீரைக் கூட்டு தயார்.