சுவை, சத்தான கீரை ஆம்லெட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஏதாவது ஒரு கீரை – 1 கப்
நாட்டு முட்டை – 3
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல் சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும். இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சத்தான, சுவையான கீரை ஆம்லெட் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“