Keerai recipe, Agathi keerai cooking tamil video: மார்க்கெட்டுகளில் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் அகத்திக் கீரை. இதில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கீரையை எப்படி சாப்பிடலாம்? எப்படி சாப்பிடக்கூடாது? என இங்கு பார்க்கலாம்.
Advertisment
அகத்திக் கீரையில் 8.4 சதவீதம் புரதச்சத்து, 1.4 சதவீதம் கொழுப்புச்சத்து, 3.1 சதவீதம் தாது உப்புகள் உள்ளன. மேலும் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன. பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றன.
Agathi keerai, cooking tamil video keerai benefits: அகத்திக் கீரை
அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகும். சரி, எப்படி சாப்பிடுவது?
Advertisment
Advertisements
சுத்தம் செய்யப்பட்ட அகத்தி கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம். இதைச் செய்தால் வயிற்றுப்புண் சரியாகும். அகத்திக் கீரையைப்போல அவற்றின் பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்சினைகள் சரியாகும். அகத்திப் பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு கட்டுக்குள் வரும்.
மருந்துகளை முறிக்கும் தன்மை அகத்திக்கு உண்டு. எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக்கூடாது. பொதுவாக இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மருந்தாக செயல்படவேண்டியது அதற்கு எதிராக செயல்பட்டு சொறி சிரங்கை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்.
அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது அருந்திவிட்டும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"