Keerai Recipes, Keerai Poriyal Cooking Tamil Video, murungai keerai benefits: கூட்டு, குழம்பு ஆகியவற்றைவிட குழந்தைகள், இளம் வயதினர் அதிகம் விரும்பும் ஒரு உணவு வகை பொரியல். எண்ணெயில் வறுபட்ட டேஸ்ட்தான் இதற்கு காரணம். இதையே சத்தான உணவுப் பொருளாக கொடுத்தால் நல்லதுதானே!
Advertisment
அந்த வகையில் இம்யூனிட்டி தரக்கூடியதும், மலிவாக கிடைக்கக் கூடியதுமான முருங்கைக் கீரையில் எப்படி பொரியல் தயார் செய்வது? எனப் பார்க்கலாம்.
Keerai Poriyal Cooking Tamil Video: முருங்கைக் கீரை பொரியல்
Advertisment
Advertisements
முருங்கைக் கீரை பொரியல் செய்யத் தேவையான பொருட்கள் : முருங்கைக் கீரை - 1 கட்டு, நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப், காய்ந்த மிளகாய் - 5, கடுகு - ½ டீ ஸ்பூன்,
மஞ்சள்தூள் - ½ டீ ஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - ½ கப், நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
முருங்கைக் கீரை செய்முறை:
முதலில் கீரையை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் கீரையை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
கீரை வெந்ததும் துருவிய தேங்காயை போட்டு நன்றாக கிளறி விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான சத்தான முருங்கைக் கீரை பொரியல் ரெடி. மலிவாகக் கிடைக்கும் இந்த உணவுப் பொருளை தவற விடாதீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"