Keerai Recipes Tamil, Arai Keerai Kulambu Tamil Video: எப்போதுமே மலிவான விலையில் கிடைக்கும் ஒரு சத்தான உணவுப் பொருள் கீரை. கீரைகளில் அரைக் கீரை முக்கியமானது. தாம்பத்யம் சிறக்கவும், ரத்த அபிவிருத்திக்கும் இது இன்றியமையாத கீரை. சுலபமாக கடைகளிலும் மார்க்கெட்களிலும் கிடைக்கும்.
Advertisment
அரைக் கீரையை பயன்படுத்தி கூட்டு, ரசம் என செய்து சாப்பிடலாம். அரைக் கீரை குழம்பும் சுவையானது. இது சாதத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். அரைக் கீரை குழம்பு செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.
Arai Keerai Kulambu Tamil Video: அரைக் கீரை குழம்பு
Advertisment
Advertisements
அரைக் கீரை குழம்பு செய்யத் தேவையான பொருள்கள் :
அரைக் கீரை - 1 கட்டு, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 5 பற்கள், தக்காளி - 4, சின்ன வெங்காயம் - 10, கடுகு - அரை ஸ்பூன், உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன், சீரகம் - அரை ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு
அரைக் கீரை குழம்பு செய்முறை :
முதலில் அரைக்கீரையை சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக விடுங்கள். 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து, கீரை கடையும் மத்தினால் நன்கு கடைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு கிளறுங்கள். இப்போது சுவையான கீரைக் குழம்பு ரெடி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"