Keerai recipes with chapati, keerai kootu tamil video: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோவொரு ரூபத்தில் கீரையை உணவாக எடுத்துக் கொண்டிருப்பது அவசியம். தினமும் இல்லாவிட்டாலும், வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் உங்கள் உணவில் கீரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
Advertisment
கீரையை அப்படி தொடர்ந்து குழந்தைகள் சாப்பிடுவார்களா? ஒரே மாதிரி ரெசிபியை செய்தால், குழந்தைகள் நிச்சயம் முகத்தைச் சுழிப்பார்கள். சற்றே வித்தியாசமாக கீரையை பயன்படுத்த முயற்சியுங்கள். அப்படியொரு ரெசிபிதான் சப்பாத்திக்கு கீரை கூட்டு.
keerai kootu tamil video: சப்பாத்திக்கு கீரை கூட்டு
சப்பாத்திக்கு கீரை கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம். தேவையான பொருட்கள்: அரை கீரை (அ) பசலை கீரை - 1 கட்டு, துவரம் பருப்பு - 1 கப், எண்ணெய் - 1 டீ ஸ்பூன், சீரகம் - 1/2 டீ ஸ்பூன், பூண்டு- 5 பற்கள், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 4, தக்காளி - 1, சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன், மஞ்சள் - 1/4 டீ ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
துவரம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, பிறகு 4 விசில் வரும்வரை குக்கரில் வேக வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து வதக்குங்கள். அதோடு சாம்பார் பொடி, மஞ்சள் சேருங்கள். நன்கு வதங்கி கீரை சுருங்கியதும் வேக வைத்த பருப்பை ஊற்றுங்கள். இதனை கிளறிவிட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிடுங்கள். பின் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கீரையில் கொட்டுங்கள். இப்போது சுவையான கீரைக் கூட்டு தயார். இது சப்பாத்தி, தோசை ஆகியவற்றுக்கு நல்ல டேஸ்டாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"