Keerai Sadam Recipe (Source: Nmami Agarwal/Instagram; designed by Gargi Singh)
Keerai Sadam Recipe In Tamil, Keerai Sadam Tamil Video: கீரையின் பயன்கள் பற்றி நமக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. கண் பார்வைக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது கீரைதான். மிக எளிதாக நம் வீட்டுப் பக்கத்தில், காய்கறிக் கடையில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் கீரையைப் பெற முடியும்.
Advertisment
கீரை உணவுகள் சத்தானது மட்டுமல்ல, டேஸ்டானதும்கூட. கீரையை கூட்டாகவோ, ரசமாகவோ செய்து பயன்படுத்த முடியும். அதேபோல கீரை சாதமாகவும் செய்து சாப்பிடலாம். கீரை சாதம் எப்படி செய்வது? என இங்குக் காணலாம்.
Keerai Sadam Tamil Video: கீரை சாதம்
Advertisment
Advertisements
கீரை சாதம் செய்யத் தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப், கீரை (ஏதாவது ஒரு வகை) - 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு பற்கள் - 4, பச்சை மிளகாய் - 2, சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணை - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1/2 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கீரை சாதம் செய்முறை :
கீரை சாதம் செய்முறை வருமாறு: சாதத்தை குழையாமல் வடித்துக் கொள்ளவும். கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
தொடர்ந்து அதில் கீரையைச் சேர்த்து வதக்குங்கள். இதில் தண்ணீர் விடத் தேவையில்லை. கீரையின் நீர்ச்சத்தே போதுமானது. அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாக கிளறி விடவேண்டும். கீரை சுண்டும் வரை வதக்கவும். கடைசியில், வடித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி 3 நிமிடம் மூடி வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான சத்தான கீரை சாதம் தயார்.
கீரை சாதத்தை இப்படி டேஸ்டியா செய்தால், குழந்தைகளும் விரும்புவார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"