ஒரு முறை கீரை சாதம், இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் அரிசி
அரை கப் துவரம் பருப்பு
கால் கப் பாசி பருப்பு
2 ஸ்பூன் எண்ணெய்
20 சின்ன வெங்காயம்
6 பல் பூண்டு
4 தக்காளி
பச்சை மிளகாய் 2
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
1 ½ ஸ்பூன் சாம்பார் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
உப்பு
2 கைபிடி முருங்கைக்கீரை
6 கப் தண்ணீர்
செய்முறை : அரிசி, துவரம் பருப்பு, பாசி பருப்பை கழுவ வேண்டும். தொடர்ந்து குக்கரில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், பூண்டு, தக்களியை சேர்த்து கிளரவும். பச்சை மிளகாய் 2 சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் பொடி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். முருங்கைக்கீரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரிசியை சேர்த்து 6 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வைத்து வேக வைக்கவும்.