/tamil-ie/media/media_files/uploads/2020/09/5-25.jpg)
keerai vadai recipe keerai vadai recipe in tamil
Keerai vadai recipe, keerai vadai recipe in tamil : சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழையோ வெயிலோ நம்மை எதுவும் செய்யாது. பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும் . கீரையை பொரியல், கூட்டு மட்டும் செய்து சாப்பிடாமல் வடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
ஆரோக்கியம் நிறைந்த கீரை வடை செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க..
பச்சை மிளகாய் - 2,
முளைக்கீரை, பசலைக் கீரை - தலா ஒரு கப்,
வெங்காயம் - 2
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
keerai vadai recipe செய்முறை:
* கீரை, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கீரை, வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* கடாயை அடுப்பில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* சுவையான கீரை வடை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.