வெறும் கார்டியோ மட்டும் போதாது: கீர்த்தி சுரேஷ் வெயிட் லாஸ் ஜர்னி
நான் குண்டாக இருந்தேன் என்று சொல்ல மாட்டேன். சற்று திரண்டு இருந்தேன். அதிக பருமனான நபரும் இல்லை. கார்டியோ பயிற்சிகளை மட்டுமே நான் செய்தேன். ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங் இல்லாமல் கார்டியோ மட்டும் செய்தால் தசைகள் வலுவிழந்து விடும்.
நான் குண்டாக இருந்தேன் என்று சொல்ல மாட்டேன். சற்று திரண்டு இருந்தேன். அதிக பருமனான நபரும் இல்லை. கார்டியோ பயிற்சிகளை மட்டுமே நான் செய்தேன். ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங் இல்லாமல் கார்டியோ மட்டும் செய்தால் தசைகள் வலுவிழந்து விடும்.
மக்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், 2018-19 காலகட்டத்தில் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறியது குறித்து அண்மையில் வெளிப்படையாகப் பேசினார். இது குறித்து அவர் பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், "நான் அப்போது மிகவும் குண்டாக இருந்தேன். எடை குறைப்பதற்காக அதிகம் கார்டியோ பயிற்சிகள் (cardio) செய்தேன். ஆனால், அதனுடன் சேர்த்து, தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகளை (strength training) செய்யவில்லை. வெறும் கார்டியோ மட்டுமே செய்ததால், என் உடல் எடை வேகமாக குறைந்தது. அதனால், தசைகளும் குறைந்தன" என்று கூறியிருக்கிறார்.
Advertisment
மேலும், "சுமார் 8-9 மாதங்களில் 8-9 கிலோ எடை குறைத்தேன். அப்போதுதான் என் முகம் ஒல்லியாக மாறியது. 2019ஆம் ஆண்டு புகைப்படங்களைப் பார்க்கும்போது, என் முகம் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நான் என் வாழ்க்கையில் உடற்பயிற்சியே செய்யவில்லை. சாப்பிடுவது, உறங்குவது, வேலைக்குச் செல்வது, திரும்பி வந்து உறங்குவது என இந்த வழக்கமான வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றி வந்தேன். இது ஆரோக்கியமானதா என்றால், நிச்சயமாக இல்லை. 'மகாநடி' படத்துக்குப் பிறகு, எனக்கு கிடைத்த ஓய்வில் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷின் இந்த அனுபவத்திலிருந்து, உடல் எடையை குறைப்பதில் தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் ஏன் அவசியம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Advertisment
Advertisements
உடல் எடை குறைப்பது, ஆரோக்கியமாக இருப்பது இரண்டும் ஒன்றல்ல
டெல்லியில் உள்ள சி.கே. பிர்லா மருத்துவமனையின் பிசியோதெரபி துறை தலைவர் டாக்டர் சுரேந்தர் பால் சிங், "உடல் எடையை குறைப்பதும், ஆரோக்கியமாக இருப்பதும் ஒன்று கிடையாது. உடல் எடையை குறைப்பதற்கு நாம் ஒரு இலக்கை நிர்ணயிக்கும்போது, அந்த முறையில் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா? சரியான வழியைத் தேர்ந்தெடுக்கிறோமா? என்று கேட்க வேண்டியது அவசியம். மருத்துவ ரீதியாக, உடல் எடையைக் குறைப்பதற்கான அடிப்படை கொள்கை எளிதானது: உடல் எடையை குறைக்க, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை விட அதிகமாக எரிக்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்க, நீங்கள் எரிப்பதை விட அதிக கலோரிகளை உட்கொள்ள வேண்டும். இந்த கலோரி சமநிலைதான் எந்தவொரு உடல் எடை மேலாண்மை திட்டத்திற்கும் அடித்தளமாக அமைகிறது" என்று கூறினார்.
வெறும் கார்டியோ மட்டும் போதாது
டாக்டர் சிங் மேலும் கூறுகையில், "உடல் எடையைக் குறைக்க பலர் ஓட்டம், சைக்கிளிங் அல்லது ஏரோபிக்ஸ் போன்ற கார்டியோ பயிற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். கலோரிகளையும் கொழுப்பையும் குறைப்பதற்கு கார்டியோ பயிற்சிகள் பயனுள்ளதாக இருந்தாலும், அதை மட்டும் சார்ந்திருப்பது காலப்போக்கில் தசைகளை பலவீனமாக்கி விடும். வலிமை பயிற்சிகளில் ஈடுபடாமல் இருந்தால், தசைகள் வலுவிழந்து, ஒட்டுமொத்த உடற்தகுதி நீண்ட காலத்திற்குப் பாதிக்கப்படலாம்" என்றும் தெரிவித்தார்.
சமநிலையான அணுகுமுறை அவசியம்
அதனால்தான், நீண்ட காலத்திற்கு உடல் எடையை குறைப்பதற்கும், உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் சமநிலையான அணுகுமுறை அவசியம். இதற்கு முக்கியமாக இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
முதலாவதாக, நீங்கள் என்ன, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பற்றி கவனமாக இருப்பது முக்கியம். "இரண்டாவது, உங்கள் உடற்பயிற்சி. கார்டியோ பயிற்சிகள் மற்றும் தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகளை ஆரோக்கியமான முறையில் கலப்பது சிறந்த முடிவுகளைத் தரும். தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் தசைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, உடலமைப்பை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட கால உடற்தகுதிக்கு உதவுகிறது" என்று டாக்டர் சிங் கூறினார்.