சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 10ஆம் கட்ட அகழாய்வில் 120 செ.மீ. ஆழத்தில் தந்தத்தினாலான ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோளவடிவ தலைப் பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/W1PhIQBJNgkhmKf8RRSi.jpeg)
1.3 செ.மீ உயரமும் 1.5 செ.மீ விட்டம் கொண்ட தலைப்பகுதியையும் 1.3 செ.மீ விட்டம் கொண்ட அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. கருமை நிறமுடைய இந்த ஆட்டக்காய் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது. தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட தமிழச் சமூகம் வாழ்ந்தற்கானச் சான்றாகக் கருதப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“