/indian-express-tamil/media/media_files/2025/07/30/binni-krishnakumar-2025-07-30-16-00-15.jpg)
Binni krishnakumar
கேரளப் பெண்களின் பளபளப்பான சருமம், கருமையான, அடர்த்தியான கூந்தல் மற்றும் மென்மையான தோற்றம் பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இதற்குப் பின்னால் ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அவர்களின் அழகிய நிறத்திற்குப் பின்னால் ஒரு எளிய ரகசியம் உள்ளது, அதை பிரபல பின்னணிப் பாடகி பின்னி பகிர்ந்துள்ளார்!
பின்னி தனது அழகுக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டபோது, "தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்து, தலைமுடியை அலசுவோம். நான் குளிக்காமல் இருக்க மாட்டேன், தினமும் குளிப்பேன். நாம் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்கும்போது, அது முகத்திலும் இறங்கும். கேரளப் பெண்களின் சருமத்தில் எப்போதும் ஒரு சிறிய பளபளப்பைப் பார்க்க முடியும், ஏனெனில் அவர்கள் தினமும் தலைக்குக் குளிப்பதால்தான்" என்றார்.
கேரளப் பெண்களின் அழகு ரகசியத்தில் முதன்மையானது தேங்காய் எண்ணெய். இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஒரு அற்புதமான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. தலைமுடிக்கு ஊட்டமளித்து, பளபளப்பை அதிகரித்து, நுனி முடி பிளவுகளைத் தடுக்கிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக்கி, வறட்சியைக் குறைக்கிறது.
அவர்களின் அழகுப் ரகசியத்தைப் பின்பற்றி, நாமும் இயற்கையான முறையில் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தையும், அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.