New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/09/sabarimala-temple.jpg)
மண்டல-மகரவிளக்கு சீசன் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26-ந் தேதி அன்று மண்டல பூஜையுடன் நிறைவடையும்.
சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜை காரணமாக கோவில் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு யெ்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு சீசன் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26-ந் தேதி அன்று மண்டல பூஜையுடன் நிறைவடையும். அதன்பிறகு மகரவிளக்கு சீசனுக்காக இந்த ஆண்டு டிச., 30ல் கோவில் திறக்கப்பட்டு, மகரவிளக்கு விழா 2025 ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மண்டல மகர விளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மண்டல மகர விளக்கு பூஜைக்காக சன்னிதானத்தில் தினமும் 80,000 பக்தர்கள் மட்டுமே வழிபாடு செய்ய முடியும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்தை முன்னிட்டு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விர்ச்சுவல் வரிசை முன்பதிவு செய்யும் நேரத்தில் பயண வழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கப்படும். இதனால் பக்தர்கள் நெரிசல் குறைவான பயண வழியை தேர்வு செய்யலாம்.
கனன பாதையிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். தேவைப்பட்டால், பீக் ஹவர்ஸின் போது வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் கண்டறியப்பட்டு தேவையான உள்கட்டமைப்புகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.