Advertisment

இது கேரளா ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் - ட்ரெண்டிங் நம்பர் 1 குக் வித் கோமாளி ஷிவாங்கி டிப்ஸ்!

Kerala Style Mango Pickle Cook with Comali Sivangi Youtube மாங்காயில் கல் உப்பு, வறுத்த மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, சிறிதளவு தேங்காய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும்.

author-image
WebDesk
New Update
Kerala Style Mango Pickle Cook with Comali Sivangi Youtube Tamil News

Kerala Style Mango Pickle Cook with Comali Sivangi Youtube Tamil News

Kerala Style Mango Pickle Cook with Comali Sivangi Youtube Tamil News : சூப்பர் சிங்கர் மூலம் திரைக்கு வந்திருந்தாலும், ஷிவாங்கியின் பாடலைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய ஹியூமர் சென்ஸுக்குதான் ரசிகர்கள் அதிகம். தன் யூடியூப் சேனலில் ஏறக்குறைய 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்களை கொண்டிருக்கும் இவர், சமீபத்தில் அப்லோட் செய்திருந்த மாங்காய் ஊறுகாய் ரெசிபி, 1 மில்லியன் வியூஸ்களை கடந்து ட்ரெண்டிங் நம்பர் 1-ல் இருக்கிறது. அவர்களுடைய ஸ்பெஷல் ரெசிபியை இங்குப் பார்க்கலாம்.

Advertisment
publive-image

லாக்டவுனை தொடர்ந்து தன் பெரியம்மா வீட்டிற்குக் கேரளாவிற்கு சென்ற ஷிவாங்கி, அங்கு அவரை மாங்காய் ஊறுகாய் செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே விளைந்த ஃப்ரெஷ் மாங்காயை ஷிவாங்கியே ஏணி வைத்துப் பறித்தார். அதனை கியூப் சைசில் கட் செய்யும்போதே ஷிவாங்கியின் முகம் மலர்கிறது.

publive-image

தேவையான அளவு மிளகாய்ப் பொடியை எடுத்து, அதன் பச்சை வாசம் போகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். பிறகு அறிந்து வைத்திருக்கும் மாங்காயில் கல் உப்பு, வறுத்த மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, சிறிதளவு தேங்காய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும். இதனைச் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

பிறகு, 2 க்ளாஸ் தண்ணீர், 1/2 கப் வினிகர், கொஞ்சம் வெல்லம் ஆகியவற்றைக் கலந்து சூடு செய்து, இந்தக் கலவையைத் தயாரித்து வைத்துக்கொள்ளவும். இந்த ஊறுகாயை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் தாராளமாக சாப்பிடலாம். ஏற்கெனவே மிளகாய் பொடியில் ஊறவைத்த மாங்காய் கலவையோடு தயாரித்து வாய்த்த வெல்லம் கலவையையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். தேவைப்பட்டால் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

ஷிவாங்கிக்கு மிகவும் பிடித்த இந்த மாங்காய் ஊறுகாய் ரெசிபி நிச்சயம் பலரின் ஃபேவரைட் லிஸ்டில் வந்திருக்கும். தோசை, தயிர் சாதம் உள்ளிட்ட பல வகை உணவுகளோடு இதனைச் சேர்த்து சாப்பிட்டால் 'அப்படி இருக்குமாம்!'.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shivangi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment