Kerala style Red Coconut Chutney Recipe Tamil : தேங்காய் சட்னி என்றால் வெள்ளை நிறத்தில்தான் இருக்கவேண்டுமா என்ன? சுவையில் கொஞ்சமும் மாறாத இந்த அசத்தலான சிவப்பு தேங்காய் சட்னியை ஒருமுறை செய்து பாருங்கள். நிச்சயம் மாறுபட்ட சுவையைப் பெறுவீர்கள்.
தேவையான பொருள்கள் :
இறுக்கமாக நிரம்பிய அரைத்த தேங்காய் - ⅓ கப்
நறுக்கிய வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் - ½ டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 2 முதல் 3
தண்ணீர் - அரைக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - 8 முதல் 10 இலைகள்
நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
அரைத்த தேங்காய், வெங்காயம் உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் இஞ்சியை ஒரு சட்னி கிரைண்டரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
சிவப்பு மிளகாயின் கார சுவையை நீங்கள் குறைக்க விரும்பினால், அவற்றை ஒரு பாத்திரத்தில் லேசாக வறுக்கவும். அதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
உளுத்தம் பருப்பு மெரூனிஷ் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பிறகு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் வெளிர் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அரைத்த சிவப்பு தேங்காய் சட்னியைத் தாளிப்புடன் சேர்க்கவும்.
இந்த கேரள ஸ்டைல் சிவப்பு தேங்காய் சட்னியை இட்லி, தோசை, மெது வடை அல்லது ஊத்தப்பத்துடன் பரிமாறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil