திருவனந்தபுரம் - காசர்கோடு Semi-High Speed ரயில் பாதை அல்லது Silver Line திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு கேரள மாநில அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடுக்கு இடைப்பட்ட 529.45 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடப்பதே சில்வர் லைன் (Silver Line) என பெயரிடப்பட்டுள்ள இந்த பாதையின் நோக்கமாகும்.
தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே பயணிக்க சுமார் 12 மணி நேரம் ஆகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்போகும் நிறுவனமான Kerala Rail Development Corporation Limited (K-rail) சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள திட்ட பாதையில் சில சிறிய மாற்றங்கள் அமைச்சரவையால் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் சாத்தியகூறு அறிக்கையில் இந்த திட்ட பாதை மாஹே (Mahe) யூனியன் பிரதேசம் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சரவையால் செய்யப்பட்ட மாற்றங்களின் படி திட்ட பாதையில் உள்ள புதுச்சேரியின் ஒரு பகுதியான மாஹே தவிர்க்கப்படும், என பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சில்வர் லைன் எனப்பெயரிடப்பட்டு அமைய உள்ள இந்த புதிய அதிவேக ரயில் பாதை காசர்கோடு முதல் திரூர் வரையில் தற்போதுள்ள ரயில் பாதைக்கு இணையாக அதன் அருகிலேயே செல்லும். ஆனால் திரூர் முதல் திருவனந்தபுரம் வரையிலான பாதை தற்போதுள்ள பாதையிலிருந்து சற்று விலகிச் செல்லும். சில்வர் லைன் அதிவிரைவு ரயில் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம், செங்கனூர், கொச்சின் விமான நிலையம், கோட்டயம், கொல்லம், எர்ணாகுளம், கண்ணூர், திரூர், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும்.
ரூபாய் 63,941 கோடி மதிப்பில் அமைய உள்ள இத்திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை Railway Board, NITI Aayog மற்றும் மத்திய அமைச்சரவை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த திட்டம் 5 வருடங்களில் கட்டி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. Kerala semi-high speed Silver Line திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சரகம் ஏற்கனவே கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைய உள்ள இந்த இருவழி கிரீன் பீல்ட் பாதையில் ரயில்களை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் ரயில்கள் 11 மாவட்டங்கள் வழியாக 529.45 கிலோமீட்டர் தூரம் சில்வர் லைன் வழியாக பயணித்து காசர்கோட்டை 4 மணி நேரத்தில் சென்றடையும். பரபரப்பான திருவனந்தபுரம் - எர்ணாகுளம் நகரங்களுக்கு இடைப்பட்ட தூரத்தை கடப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஒன்றரை மணி நேரமாக இருக்கும்.
இந்த திட்டம் நேரடியாக மற்றும் மறைமுகமாக பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது சாலை போக்குவரத்தை சார்ந்து இருப்பதைக் குறைக்கும், இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்த திட்டம் போக்குவரத்து நெருக்கடியை நீக்குவதோடு சாலை விபத்துக்களையும் கனிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வளிமண்டல மாசுபாடு பிரச்சனையையும் தீர்க்கும். சில்வர் லைன் திட்டம் கேரளாவின் முக்கிய வருமான ஆதாரமாக இருக்கும் சுற்றுலாவையும் மேம்படுத்தும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.