எங்கயாவது டூர் போகணும் போல இருக்கா? அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க

Best Places to Visit in Kerala: டிரெக்கிங் செல்ல அதிகம் விரும்புபவர்களின் ஃபேவரைட் ஸ்பாட் இது தான்.

Top 13 Off Beat Attractions of Kerala: வீடு, வேலை இடம் என எல்லா இடத்திலும் டென்ஷன் இருக்கிறதா? சின்னதா அழகான டூர் ஒன்று தேவைப்படும்போது கேரளா பற்றி யோசிப்பது சரியான முடிவு தான். கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்களும் பல இருக்கிறது.

தென் இந்தியாவில் இருக்கும் பலரும் ஏதாவது ஒரு சிறிய டூர் செல்ல வேண்டும் என முடிவு செய்ததும் அவர்கள் மனதிற்குள் சட்டென்று தோன்றுவது கேரளம் தான். அதர்கு முக்கிய காரணம் இரண்டு தான். ஒன்று, தென் இந்தியர்களுக்கு அருகே அலைச்சல் இல்லாமல் செல்லும் வசதி உள்ள இடம்; மற்றொண்டு, இயற்கை எழில் கொஞ்சும் அழகில் இலைப்பாற நினைப்பதுவே.

கேரளா இயற்கை அழகில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய இடங்கள்

ஆனால் தென் இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டினர்கள் வந்தாலும், கேரளாவில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய இடங்கள் என்று ஒரு பட்டியல் உள்ளது. என்ன அது? எப்படி போக வேண்டும் என்பதை விவரிக்கிறோம்…

1. மராரி பீச், ஆலப்புழா

kerala places, கேரளா

ஆலப்புழாவில் இருக்கும் மராரி கடற்கரையை ‘ஹாமோக் மீச்’ என்றும் அழைப்பார்கள். கடற்கரை ஓரத்தில், உங்கள் பாதத்தை லேசாக அலைகள் தழுவிச் செல்ல, வத வதப்பான வெயிலில் அப்படியே மணலில் படுத்து ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் இந்த இடம் உங்களுக்கானது தான்.

ஆலப்பியில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் தள்ளி இருக்கும் இந்த கடற்கரை பெரும்பாலானோர் கண்களில் தென்படுவதில்லை. அலப்புழா ரயில் நிலையத்திற்கு அருகே தான் இந்த கடற்கரை உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோ அல்லது டேக்ஸி எடுத்தாலும் இங்கு மராரி கடற்கரைக்கு எளிதாக வந்துவிடலாம்.

2. செம்பரா சிகரம், வயநாடு

kerala places, கேரளா

கடல் மட்டத்தில் இருந்து 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பசுமை போர்த்திய இயற்கையின் அழகுக்கு முன்னாள் இவ்வுலகில் எதுவுமே நிகராகாது என்பதற்கு இந்த இடம் ஒரு தகுந்த உதாரணம் இது. கேரளாவில் உள்ல சிறந்த சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்று. டிரெக்கிங் செல்ல அதிகம் விரும்புபவர்களின் ஃபேவரைட் ஸ்பாட் இது தான்.

மலையில் நடுவே இருதயம் போன்ற சிறிய ஏரி ஒன்று அமைந்திருக்கும். இதனை ‘இருதய தடாகம்’ என்று பிரபலமாக அழைக்கின்றனர். இந்த மலையில் உச்சத்தை சென்றடைய சுமார் 3 மணி நேரமாகும். உச்சத்திற்கு சென்றால், மேகம் உங்களை தழுவிச் செல்வதை உணர முடியும்.

ஆனால் இந்த இடத்திற்கு செல்வதற்கு மேப்படி வனத்துறையினரின் அனுமதி மிகவும் அவசியம். பூச்சிக் கொள்ளி கிரீம், லோஷன் போன்றவற்றை எடுத்துச் செல்வது நல்லது.

3. வேம்பநாடு ஏரி, குமரகோம்

kerala places, கேரளா

தற்போது அதிக அளவில் பிரபலமாகி வரும் கேரளாவின் சுற்றுலா தளத்தில் வேம்பநாடு ஏரியும் ஒன்று. அங்கிருக்கும் பலரும் அதிகமாக சென்று இளைப்பாறும் இடம் இந்த ஏரி. இங்கு படகு சவாரி மேற்கொள்வது அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஓணம் பண்டிகை காலத்தில் இந்த இடமே விழா கோலம் கொண்டிருக்கும். கோட்டயம் பகுதிக்கு ஓணம் பண்டிகை காலத்தில் வருபவர்கள் இங்கு நடக்கும் நீளமான படகு போட்டியை காணும் அறிய வாய்ப்பு உண்டு.

கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் மட்டுமே தள்ளி இருக்கும் இந்த இடத்திற்கு ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கார் எடுத்து வருவதே எளிய முறை.

4. கும்பாலங்கி, கொச்சி

kerala places, கேரளா

கொச்சி நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் உள்ள சிறு தீவுக்கிராமமே இந்த கும்பாலங்கி ஒருங்கிணைந்த சுற்றுலா கிராமம் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுற்றுலா அம்சங்களுக்காக இது உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. அமைதியான கழிமுக நீர்த்தேக்கத்தை கொண்டுள்ள இந்த தீவானது, படகுச்சுற்றுலாவுக்கும், மீன்பிடிப்பு பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் ஏற்ற ஸ்தலமாக திகழ்கிறது.

ஏர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு செல்ல போக்குவரத்து வசதிகள் நிறைய இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close