Advertisment

கடவுளின் தேசத்தில் இதுவரை நீங்க பார்க்காத பகுதிகள்... கேரவன் டூரிசம் அறிமுகம் செய்யும் கேரளா!

கேரளாவின் சுற்றுலாத் துறை, பஞ்சாயத்துகள் போன்ற உள்ளூர் சுய நிர்வாக அமைப்புகளை இந்த முயற்சியின் கீழ் முக்கிய பங்குதாரர்களாக எடுத்துக் கொள்ளும்.

author-image
WebDesk
New Update
kerala

கேரளாவின் அழகில் திளைக்கவும் (Source: Instagram/KeralaTourism, Designed by Gargi Singh)

கிராமப்புறங்களில் அதிகம் அறியப்படாத 100க்கும் மேற்பட்ட இடங்களை உள்ளூர் சுய நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் சுற்றுலா தலங்களாக கேரள அரசு காட்சிப்படுத்த உள்ளது.

Advertisment

கடற்கரைகள், உப்பங்கழிகள் மற்றும் மலைப்பகுதிகளில் மட்டும் இனி கவனம் இருக்காது. நாங்கள் இப்போது முழு கேரளாவையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுற்றுலாப் புகலிடமாக மாற்ற விரும்புகிறோம், இங்கு பார்வையாளர்கள் ஏராளமான அனுபவங்களைப் பெறலாம், என்று கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் செவ்வாயன்று கூறினார்.

கேரளாவின் சுற்றுலாத் துறை, பஞ்சாயத்துகள் போன்ற உள்ளூர் சுய நிர்வாக அமைப்புகளை இந்த முயற்சியின் கீழ் முக்கிய பங்குதாரர்களாக எடுத்துக் கொள்ளும்.

மாநிலத்தின் கிராமப்புறங்களில் அதிகம் அறியப்படாத 100 க்கும் மேற்பட்ட இடங்களை, அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதுதவிர, ‘கெரவன் கேரளா’ உடன் சுற்றுலாவுக்கான கேரவன் கான்செப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் சுயநிர்வாக அமைப்புகளின் உதவியுடன் கேரளாவின் கிராமப் பகுதிகளில் 100 மற்றும் அதற்கு மேற்பட்ட இடங்களை நாங்கள் தேர்வு செய்கிறோம், என்று சுற்றுலா தகவல் அதிகாரி ஸ்ரீகுமார் எஸ் கூறினார். இந்த இடங்களில் குமரகம், மறவந்துருத்து மற்றும் வைக்கம் ஆகியவை அடங்கும்.

சம்பந்தப்பட்ட உள்ளூர் சமூகங்களுக்கும் பயனளிக்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு கிராம வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதே இதன் யோசனை. இந்த முயற்சி கடந்த ஆண்டு லண்டனில் நடந்த உலக பயண சந்தையில் உலகளாவிய விருதை வென்றது.

கேரவன் சுற்றுலா (Keravan Kerala) ஒரு வளரும் திட்டமாகும். இது சுற்றுலாப் பயணிகளை, ஹோட்டல்கள் மற்றும் வளங்கள் இல்லாத பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கும். அங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் சுற்றுலாப் பயணிகள் அங்கு பாதுகாப்பாக தங்கலாம், என்றார் ஸ்ரீகுமார்.

கேரள அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் சுற்றுலாத் துறை, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கணிசமாக பாதிக்கப்பட்டது, பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்ததால் 2022 இல் மீட்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றோம்... 2022 ஆம் ஆண்டில் 3.18 கோடி உள்நாட்டு பயணிகள் மாநிலத்திற்கு வருகை தந்தனர், என்று ஸ்ரீகுமார் கூறினார்.

மாநில சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, மாநிலத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022 இல் 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது இந்தியாவின் சராசரி அளவை விட அதிகம். இதன் விளைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 12.07 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment