Kerala Traditional Vallam Kali boat race Vembanad Lake Tourism : கேரளாவில் இருக்கும் மிகப்பெரியாக ஏரியாக திகழ்கிறது வேம்பநாடு ஏரி. ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊடாக இந்த வேம்பநாடு ஏரி பாய்கிறது. கேரளத்தின் முக்கியசுற்றுலா சார்ந்த நிகழ்வுகள் இந்த ஏரியில் தான் நடைபெறுகின்றன.
2,000 சதுரக்கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள வேம்பநாடு ஏரி இந்தியாவின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய ஏரியும் ஆகும். இந்த ஏரி கோட்டயம் மற்றும் ஆலப்புழா பகுதி வரைபரவி இருக்கும்.
இந்த ஏரி இந்தியாவின் சுற்றுலாத்தளங்களில் மிகவும் முக்கியமான ஓர் இடம்.
கடந்த மாதம் நிகழ்ந்த மிகப் பெரிய மழை வெள்ளத்தால் தன்னுடைய எல்லைகளை மூன்று மடங்காக அதிகரித்துக் கொண்டுள்ளது வேம்பநாடு ஏரி என செண்ட்ரல் வாட்டர்போர்ட் கமிசன் கூறியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் பம்பை, மணிமலா, அச்சன் கோவில் மற்றும் மீனாச்சில் போன்ற ஆறுகள் நேராக இந்த வேம்பநாடு ஏரியில் தான் வடிகின்றன. இந்த எரி நீரே இறுதியில்கடலில் கலக்கிறது.
வேம்பநாடு ஏரியில் இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம்
வேம்பநாடு ரயில் பாலம் கேரளா மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி, வல்லார்பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது. கட்டப்படுகையில் இதுவே இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலமாகஇருந்தது. தற்போது இந்தியாவில் நீர்நிலைகளுக்கு மேலிருக்கும் மிக நீளமான பாலங்களுள் இது நான்காவதாக உள்ளது. இப்பாலம் சரக்குப் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரயில் பாலம், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், (RVNL) என்ற ஒரு இந்திய அரசு நிறுவனத்தால் சூன் 2007-இல் கட்டத்தொடங்கப்பட்ட இப்பாலம் 2010 மார்ச் முடிக்கப்பட்டது. இப்பாலத்தின் நீளம் 4.62 கிலோமீட்டர் ஆகும்.
ஓணம் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் மாதத்தில் 'வல்லம் கழி' என்னும் படகு போட்டி இங்கு தான் நடத்தப்படுகிறது. ஆலப்புழாவில் இதே வேம்பநாடு ஏரி 'புன்னமடா ஏரி' என அழைக்கப்படுகிறது. அந்தஏரியில் நடக்கும் படகு போட்டியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிகின்றனர்.
இந்த படகு போட்டியின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'சுடன் வல்லம்' எனப்படும் பாம்பு படகு போட்டி தான். நீண்ட படகில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஒரே நேரத்தில் ஆசகாயமாக துடுப்புபோட்டபடி செல்லவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
மேலும் ஆலப்புழா படகு வீடுகள் சுற்றுலா வாசிகளை மகிழ்விக்கும் . ஆலப்புழாவில் அலைகள் எழாத உப்பங்கழி நீரோடைகள் அமைந்திருப்பதால் அவற்றில் படகுகள் எந்தவித சிரமமும் இன்றி செல்லமுடியும். இதனை பயன்படுத்தி படகுகளே சுற்றுலா தாங்கும் விடுதிகள் போல் மாற்றப்பட்டு தேனிலவை கொண்டாடவும், விடுமுறையை களித்திடவும் சிறந்த இடமாக ஆலப்புழாவை மாற்றியிருக்கிறது. அத்துடன் இந்த ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை ரசிப்பதற்காகவே ஒரு கூட்டம் படை எடுக்கும்.
மேலும் படிக்க : கோவா செல்ல உங்களை வா வா என்றழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி