scorecardresearch

‘தாயான தந்தை, தந்தையான தாய்’; குழந்தைக்கு பெயர் சூட்டிய கேரள திருநங்கை தம்பதி

நாட்டையை திரும்பி பார்க்க வைத்துள்ள கேரள திருநங்கை தம்பதி தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டினர்.

Kerala trans couple holds naming ceremony of baby on Womens Day
குழந்தைக்கு பெயர் சூட்டிய திருநங்கை தம்பதி

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை தம்பதியர் ஜியா பவல் மற்றும் ஜஹாத்.
இவர்கள் தங்களது குழந்தைக்கு மகளிர் தினத்தில் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தக் குழந்தைக்கு ஜாபியா ஜஹாத் (Zabiya Zahhad) எனப் பெயரிட்டுள்ளனர். இது குறித்து தம்பதியர் கூறுகையில், “எங்கள் குழந்தையின் பிறப்பு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். என் ஆசை நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. இந்த விழா எனது கனவாக இருந்தது,” என்றார்.
கடந்த மாதம் இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜஹா குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது இவர் ஆணாக உள்ளார்.

இவரது கர்ப்பபை அகற்றப்படாத நிலையில் இது சாத்தியமாகி உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தையுடன் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இந்த திருநங்கை, திருநம்பி தம்பதியருக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது, இது நாட்டிலேயே முதல் முறையாக கருதப்படுகிறது.
ஜஹாத் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாலும் அவர் தனது பெயரை குழந்தையின் தந்தையாகவும், அவரது பெண் கூட்டாளியான ஜியா பவல் அதன் தாயாகவும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kerala trans couple holds naming ceremony of baby on womens day

Best of Express