Advertisment

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை.. கேரள பல்கலை அறிவிப்பு

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்து கேரள பல்கலைக்கழகம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala University granted menstrual leave to female students

கேரள பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இங்கு மாணவிகள் ஒவ்வொரு செமஸ்டரின் வேலை நாள்களிலும் 2 சதவீதம் மாதவிடாய் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், திருமணத்துக்கு பின்பும் படிப்பை தொடரும் மாணவியரின் கல்வி பாதிக்காத வண்ணம் பிரசவ கால விடுப்பாக 60 நாள்கள் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், கொச்சி பல்கலைக்கழகம் மாணவியருக்கு மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளது. இத மாணவியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Kerala Womens Health
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment