Advertisment

‘இதுபோன்ற புகழைக் கற்பனை செய்து பார்த்ததில்லை’: போட்டோஷூட் மூலம் வைரலான கூலித்தொழிலாளி மம்மிகா!

கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் போட்டோஷூட் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
mammika

‘இதுபோன்ற புகழைக் கற்பனை செய்து பார்த்ததில்லை’: போட்டோஷூட் மூலம் இணையத்தை கலக்கிய கூலித்தொழிலாளி மம்மிக்கா!

கடந்த வாரம், கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 60 வயதான தினசரி கூலித் தொழிலாளி - மம்மிகா - ஒரு திருமண உடை நிறுவனத்திற்கான அவரது போட்டோஷூட் சமூக ஊடகங்களில் வைரலானதால் ஓவர் நைட்டில் புகழ் பெற்றார்.

Advertisment

SHK டிஜிட்டல் திருமண ஸ்டுடியோவின் நிறுவனரும், புகைப்படக்காரர், வீடியோகிராபர் மற்றும் கிராஃபிக் டிசைனர் ஷரீக் வயலில் ஷ்க்’ அவர்களின் அழகியல் ரீதியாக எடுக்கப்பட்ட படங்கள் ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டன.

“மம்மிகா என் பக்கத்து வீட்டுக்காரர்; அவர் ஒரு ஸ்பெஷல் போட்டோகிராஃபி லுக்-ஐ கொண்டுள்ளார், எனவே அவர் எனது தேர்வாக இருந்தார்,” என்று ஷரீக் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

ஆனால் மம்மிகா இப்படி ஒரு ரெஸ்பான்ஸை எதிர்பார்த்தாரா? இந்த படப்பிடிப்புக்கான யோசனை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவாதிக்கப்பட்டது. "ஆனால் இப்போது தான் அதற்கான நேரம் வந்தது, உடனே நாங்கள் ஷூட் செய்தோம். ஆனால் இவ்வளவு எளிமையான போட்டோஷூட், எனக்கு இவ்வளவு புகழைப் பெற்றுத் தரும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

"இந்தப் படங்கள் இணையத்தில் பிரபலமடைந்ததும், ஊடகங்களில் செய்தி வெளியானதும் தான், இது ஒரு பெரிய நிகழ்வாக மாறியதை உணர்ந்தேன்" என்று மம்மிகா கூறினார்.

படங்களில், ஷரீக்கின் நிறுவனமான’ யுவர் சாய்ஸின் விளம்பரத்திற்கு மம்மிக்கா நவநாகரீக பிளேசர் மற்றும் சன்கிளாஸில்’ அழகாக இருந்தார். தோற்றத்திற்கு ஒரு முறையான டச் கொடுப்பதற்காக அவர் கைகளில் ஐபேடை வைத்திருப்பதைக் கூட காண முடிந்தது.

படங்களுக்கு பதிலளித்த ஷரீக், தனது நண்பரின் நேர்த்தியான அவதாரத்தை “மம்மிக்கா 2.0” என்று அழைக்கலாம் என்று கூறினார்.

ஒரு நாளைக்கு 600-1,000 ரூபாய் சம்பாதிக்கும் 60 வயது முதியவரின் போட்டோஷூட் மேக்ஓவர்’ ஒரு வீடியோவில் படம்பிடிக்கப்பட்டது., ஒப்பனை கலைஞர் மஜ்னாஸ் மேக்கப் செய்ய உதவினார்.

சில இன்டர்னெட் யூசர்ஸ்’ நடிகர் விநாயகனுடன், மம்மிக்காவின் விசித்திரமான ஒற்றுமையை சுட்டிக்காட்டினர்.

“மம்மிக்கா சின்ன வயசுல இருந்தே என் பெஸ்ட் ஃப்ரெண்ட். ஒருமுறை, எனக்கு ஒன்பது வயதிருக்கும் போது, ​​ஆற்றுக்கு குளிக்கச் சென்றேன், கிட்டத்தட்ட அடித்துச் செல்லப்பட்டேன். அவர்தான் என்னைக் காப்பாற்றினார். அப்போதிருந்து நாங்கள் ஒரு நல்ல பிணைப்பைக் கொண்டுள்ளோம், ”என்று சிரிக்கிறார் ஷரீக்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment