உன்னக்காய் என்று அழைக்கப்படும் கேரளா ஸ்பெஷல் ஸ்வீட், ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
ஏத்தைக்காய் பழம் 3
தேங்காய் 3 ஸ்பூன்
சர்க்கரை கால் கப்
முந்திரி ஒரு பிடி
திராட்சை ஒரு கை பிடி
நெய் சிறிய அளவு
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : ஏத்தைக்காய் பழத்தை அவிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, முந்திரி, திராட்சைகளை வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் தேங்காய் போட்டு வதக்கி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அவித்த பழத்தை மசித்து, அதில் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தற்போது ஏத்தைக்காய் பிசைந்த மாவை, பரப்பி, அதில் பூரணத்தை வைத்து மூட வேண்டும். இதை எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.