kg balajee instagram : சமூகவலைத்தளங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பிரபலமாகி வருகின்றனர். சிலர் சமூகவலைத்தளங்களில் அரசியல் பேசி பிரபலமாகுகின்றனர். சிலர் காமெடிகள் செய்து பிரபலமாகுகின்றனர். சிலர் மீம்ஸ் போட்டே பிரபலமாகுகின்றனர்.முன்பெல்லாம் சினிமாவில் நடித்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும்.
Advertisment
ஆனால், இப்போது அப்படி இல்லை ஸ்மார்ட்ஃபோன் இருந்தாலே போதும் ஒரே டைட்டில் நீங்கள் ஓபாமா ஆகிவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். வைரல் மீம்ஸ் போடுவது அல்லது வைரலாகும் படியான செயலை செய்வது.
இப்படி செய்தே இன்று பிரபலங்கள் வரிசையில் எத்தனையோ பேர் இடம்பிடித்து விட்டனர். கேட்டால், யூடியூப் பிரபலம் என்பார்கள், டிக் டாக் கலைஞன் என்கிறார்கள். அந்த வகையில் இன்று தனது வித்யாசமான முயற்சியால், மீம்ஸ்களால், வீடியோவால் இன்ஸ்டாகிராமில் அலறவிடும் கே.ஜி பாலாஜி பற்றி தான் பார்க்க போகிறோம் வாருங்கள்.
இன்ஸ்டாகிராம் வெறியர்களுக்கு பாலாஜி குறித்த அறிமுகம் வேண்டாம். வெறும் பொழுதுபோக்கிற்காக பாலாஜி தொடங்கிய மீம்ஸ்கள் இன்று பயங்கர ரெண்டிங். இவர் போடும் மீம்ஸ் மற்றவர்களைப் போல இல்லாமல் ஒரு தனித்தன்மையைக் கொண்டது. என்னனு கேட்கிறீர்களா? எல்லா மீம்ஸ் டெம்பிலேட்டிலும் இவர் மூஞ்சி தான் இருக்கும். இவர் தான் வருவார். இவரே இவரை கலாய்த்தும் கொள்வார்.
அதுமட்டுமில்லை இப்போது புதுவித முயற்சியாக வீடியோவிலும் கலக்குகிறார்.சென்னையில் படித்து முடித்துவிட்டு டிஜிட்டல் ஆர்டிஸ்டாக பணியாற்றும் இவர் பொழுதுப் போக்கிற்காக மீம்ஸ் போடத் துவங்கி இப்போது வைரல் மீம்ஸ் நாயகனாகவே மாறிவிட்டார்.
அதிர்ஷ்டராஜ் என்ற பெயரில் இவர் இயக்கும் குறும்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூகவலைத்தளங்களில் இவருக்கு என்று தனிஉலகம். நாளுக்கு நாள் ஃபேன்ஸ் ஃபலோவர்ஸூம் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள்.
கே.ஜி பாலாஜியின் சில வைரல் வீடியோக்கள் இதோ உங்கள் பார்வைக்கு!