/tamil-ie/media/media_files/uploads/2019/12/a17-3.jpg)
kgf chapter 1 yash acted in serial kgf chapter 2 - நாடகம் 'டூ' நாயகன் - KGF எனும் அசாத்திய படத்தின் அரக்கன் யஷ்! ஜெயித்தது எப்படி?
"யாரோ பத்து பேர அடிச்சு Don ஆனவன் இல்லடா நா...
நா அடிச்ச பத்து பேருமே Don-னுங்க தான்"
என்று மாஸ் டயலாக்கை தனது அல்ட்ரா மாஸ் மேனரிசத்தால் மெருகூட்டி, இதெல்லாம் யார்யா பார்க்குறது? என்று தமிழ் ரசிகர்கள் ஒதுக்கி வைத்திருந்த கன்னட சினிமாவையே தமிழகத்தில் ஹிட் அடிக்க வைத்தவர் யஷ்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
'கே.ஜி.எஃப் - சாப்டர் ஒன்று' படம் தமிழகத்தில் ஏ செண்டர் தொடங்கி சி செண்டர் வரை எகிறி அடித்தது.
'யார்யா இவன், கன்னட சினிமாவில் நம்மாளு மாதிரி' என்று, தமிழ் சினிமா வரலாற்றில், முதன் முறையாக ஒரு கன்னட ஹீரோவை தமிழ் ரசிகர்களை கொண்டாட வைத்து சாதித்தவர் எனும் பெருமையை யஷ் பெற்றிருக்கிறார்.
உண்மையில் சொல்லப் போனால், கேஜிஎஃப் படத்தின் பல பன்ச் டயலாக்குகளை நம்மூர் ஹீரோக்கள் பேசியிருந்தாலே காமெடியாகியிருக்கும். ஏனெனில், அந்த டயலாக்குகளில் அவ்வளவு Force இருக்கும். ஆனால், அந்த பலம் வாய்ந்த டயலாக்குகளை தனது புஜத்தில் சுமந்து, அலேக்காக ஆச்சர்யப்படுத்தி அசத்தியிருப்பார் யஷ்.
இன்று கன்னடாவில், அதிகமாக சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோக்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் மிக முக்கியமானவர். எதிர்கால நம்பர்.1 என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
அப்படிப்பட்ட யஷ், ஆரம்பத்தில் சீரியலில் நடித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
1986ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்த யஷ்-ன் இயற்பெயர். நவீன் குமார் கௌடா. இவரது தந்தை, மாநகர பேருந்து ஓட்டுனர். சினிமா மீதிருந்த ஆர்வத்தால், நாடக கம்பெனியாக ஏறி இறங்கிய யஷ்ஷுக்கு, 2004ம் ஆண்டு திருப்பு முனையாக அமைந்தது. 'உத்தராயனா' எனும் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்க, தொடர்ந்து 2007 வரை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அதன்பிறகு, பெரும் போராட்டத்தின் பரிசாக, 2009ம் ஆண்டு ஜம்படா ஹுடுகி எனும் படத்தில் சிறிய ரோலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அடுத்த ஆண்டே மோகின்ன மனசு படம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுத்தர, வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்தன.
இப்போது கே.ஜி.எஃப் பாகம் ஒன்று, அடுத்த வருடம் பாகம் இரண்டு டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.