Advertisment

ஓவர்திங்கிங் பிரச்னையில் இருந்து விடுபட உதவும் 'கேசரி முத்திரை'- மருத்துவர் விளக்கம்

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், நாக்கு நிலை முழு உடலையும் பாதிக்கிறது, என்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Khecari mudra

Astrologer says this mudra helps ‘reduce overthinking in 10 seconds’; we probe

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நம்மில் பெரும்பாலோர் ஒரு சின்ன பிரச்னைக்குக் கூட அதிகமாக சிந்திக்கிறோம். இந்த ஓவர் திங்கிங், மன அமைதியை பாதிக்கலாம் மற்றும் கவலைக்கு கூட வழிவகுக்கும்.

Advertisment

இது நிகழாமல் தடுக்க முடியாது என்றாலும், சில யோகா பயிற்சிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஜோதிடர் அருண் பண்டிட்டின் கூற்றுப்படி, அத்தகைய நடைமுறைகளில் ஒன்று கேசரி முத்திரை (Khecari mudra).

கர்லி டேல்ஸ் உடனான உரையாடலில் ஜோதிடர், ஹத யோகா பயிற்சியான மீவிங் (mewing) எப்படி 10 வினாடிகளில் அதிக சிந்தனையை குறைக்க உதவும் என்று கூறினார்.

மென்மையான அண்ணத்திற்கு மேலேயும், நாசி குழிக்குள் செல்லும் வரை உங்கள் நாக்கின் நுனியை சுருட்ட வேண்டும். உடனடியாக, உங்கள் அதீத சிந்தனை குறையும், என்று அவர் கூறினார்.

இதில் உண்மை உள்ளதா என்று நாங்கள் நிபுணர்களிடம் கேட்க முடிவு செய்தோம்.

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், நாக்கு நிலை முழு உடலையும் பாதிக்கிறது, என்கிறார்.

நாக்கு அண்ணத்திற்கு (palate) எதிராக அமைந்திருந்தால், பாராசிம்பெதெடிக் சிஸ்டம் (parasympathetic system) அதன் முறையான செயல்பாட்டைக் குறைக்கும். உதாரணமாக, இதயத் துடிப்புகள் மற்றும் சுவாச தாளம் அதிகரிக்கும்.

ஆனால் அது மென்மையான அண்ணத்திற்கு (soft palate) எதிராக அமைந்தால், சிம்பெதெடிக் அமைப்பு அதன் செயல்பாட்டைக் குறைத்து, இதயத் துடிப்பைக் குறைக்கும், நிம்மதியான சுவாசம் தரும் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், என்று டாக்டர் குமார் கூறினார்.

heart health

எனவே, விரும்பிய விளைவைப் பெற நாக்கைப் பின்னோக்கிச் சுழற்றுவதும், மென்மையான அண்ணத்தின் மீது சரியாக அழுத்துவதும் இன்றியமையாதது.

நாக்கு அசைவுகள், பொதுவாக பின்னோக்கி மற்றும் பக்கவாட்டு அசைவுகள்- அன்டெரியர் சிங்குலேட் கார்டெக்ஸை (ACC) செயல்படுத்துகிறது, இது உணர்ச்சி, சக்தி, அறிவாற்றல் மற்றும் உணர்ச்சித் தகவல் மற்றும் வலி செயலாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று டாக்டர் குமார் கூறினார்.

ACC மற்றும் அமிக்டாலா ஆகியவை, நாக்கு நிலை/இயக்கங்களால் பாதிக்கப்படுகின்றன, இது மனநிலை மற்றும் உணர்ச்சிகளின் பல அம்சங்களை ஒழுங்குபடுத்துகிறது. டாக்டர் குமாரின் கூற்றுப்படி, தளர்வுக்கு உதவும் மற்றொரு நுட்பம் மென்மையான அண்ணத்தை (soft palate) உயர்த்துவது; "ஆர்" என்று கூறுவதன் மூலம் அல்லது கொட்டாவி விடுவதன் மூலம் இதை அடைய முடியும்.

இது அண்ணத்தில் அமைந்துள்ள வேகஸ் நரம்பை ஸ்ட்ரெட்ச் செய்கிறது, இது அமைதியான விளைவுடன் தொடர்புடையது, என்று டாக்டர் குமார் கூறினார்.

ஜோதிடர் பண்டிட் ஜகந்நாத் குருஜியின் கூற்றுப்படி, கேசரி முத்திரையானது அதிகப்படியான சிந்தனையில் சிரமப்படுபவர்களுக்கு நன்மை பயக்கும்.

கண்களைத் தவிர, நாக்கில் உள்ள நரம்பு முனைகள் இந்த உலகில் நமக்கு இருக்கும் மிகவும் தீவிரமான திசைதிருப்பல்கள் மற்றும் கவனச்சிதறல்களில் ஒன்றாகும். நாம் எப்படி சுவையை அனுபவிக்கிறோம், தொடர்பு கொள்கிறோம் என்பதில்  அவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

​ஒரு ஆமை தனது தலையையும் கால்களையும் அதன் ஓட்டுக்குள் இழுப்பதை போல, நீங்கள் நாக்கைப் பின்னோக்கி இழுக்கும்போது வெளிப்புறத் தூண்டுதல்களிலிருந்து கவனத்தை மெதுவாக நகர்த்தி அதை உள்நோக்கி இயக்குகிறீர்கள், என்று குருஜி கூறினார்.

Read in English: Astrologer says this mudra helps ‘reduce overthinking in 10 seconds’; we probe

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment