Khushbu Sundar homemade hairpack hibiscus fenugreek Tamil News : நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் எளிதான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நாம் எப்போதும் தேடுகிறோம். இருப்பினும், வயது, வாழ்க்கை முறை பழக்கம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள், தலைமுடியைப் பராமரிப்பதை ஒரு பெரிய பணியாக மாற்றும். நீங்களும் சமீபத்தில் சிக்கலை எதிர்கொண்டிருந்தால் மற்றும் அதிகப்படியான முடி உதிர்தலை அனுபவித்து வருகிறீர்கள் என்றால், ஆரோக்கியமான, பளபளப்பான, அடர்த்தியான, வலுவான மற்றும் மென்மையான கூந்தலுக்காக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தரின் எளிதான வீட்டு வைத்தியம் இங்கே.
Advertisment
"என் பிரபலமான ஹேர் பேக் உடன் நான். இதுதான் ஆரோக்கியமான, வலுவான, அடர்த்தியான மற்றும் மென்மையான கூந்தலுக்கான வழி" என்ற கேப்ஷனை தன் புகைப்படத்துடன் இணைத்துள்ளார் குஷ்பு சுந்தர்.
இந்த ஹேர் பேக் செய்யத் தேவையான பொருள்கள்:
வெந்தயம் செம்பருத்திப்பூ மற்றும் சிறிதளவு செம்பருத்தி இலைகள் தயிர் முட்டை லாவெண்டர் அல்லது சிறுதுளி ரோஸ்மேரி எண்ணெய்
செய்முறை:
வெந்தயத்தை ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
அடுத்த நாள், செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலைகள், தயிர், முட்டை, சில துளி லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்.
இதனைத் தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஊறவைக்கவும். பிறகு, ஒரு நல்ல ஷாம்பூவைப் பயன்படுத்தி, பின்னர் வழக்கம் போல் கண்டிஷனர் உபயோகியுங்கள்.
நீங்கள் ஏன் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தவேண்டும் என்பது இங்கே
ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது
வறண்ட கூந்தலிலிருந்து விடுதலை தருகிறது
முடி உதிர்தல் மற்றும் ஸ்ப்ளிட் எண்டை குறைக்கிறது
உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil