நடிகை குஷ்பூ லண்டன் சாலையில் நடைப்பயிற்சி செல்லும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நல்ல வாழ்க்கையை நோக்கிய சரியான வழி என்பது, மகிழ்ச்சியான மனதுக்கும் இதயத்திற்கும் ஆரோக்கியமான வழி. உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டாம். உங்களுக்கு தேவையானது அர்ப்பணிப்பு மட்டுமே என்று அந்த பதிவில் குஷ்பு குறிப்பிட்டார்.
நிபுணர்களும், நாள் முழுவதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர், மேலும் விறுவிறுப்பான நடைபயிற்சி அதைச் செய்ய உங்களுக்கு உதவுகிறது.
நொய்டாவின் தி பாடி சயின்ஸ் அகாடமியின் இணை நிறுவனர் வருண் ரத்தன், விறுவிறுப்பான நடைப்பயிற்சி உங்கள் எடையைக் குறைக்கவும், உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவும் என்று கூறினார்.
நாள் முழுவதும் அதிக ஆற்றலைப் பெறுவீர்கள் மற்றும் இரவில் எளிதாக தூங்க முடியும். மன அழுத்தம் குறைவது, பதட்டம், தெளிவான சிந்தனை மற்றும் சிறந்த மனநிலை போன்ற மேம்பட்ட மன ஆரோக்கியமும் இதன் நன்மைகளில் அடங்கும்.
நடைபயிற்சி உட்பட உடற்பயிற்சியில் மிக முக்கியமான காரணி நிலைத்தன்மை. எனவே, அடிக்கடி நடைப்பயிற்சி மேற்கொள்வதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும். உங்கள் உடற்பயிற்சி நிலை மேம்படுவதால், அதிக முயற்சி இல்லாமல் வேகமாக அல்லது அதிக தூரம் நடக்க முடியும், என்றார்.
இருப்பினும், முக்கிய விஷயம் என்னவென்றால், இதை அதிகம் செய்யக்கூடாது. டாக்டரிடம் பேசிய பிறகே பவர் வாக்கிங் செய்ய வேண்டும். அதை சரியான வழியில் செய்யுங்கள் மற்றும் அதிகமாகச் செய்யாதீர்கள். விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது ஒரு நாளில் 10,000 அடிகள் நடப்பது ஒரு நபரின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என செம்பூரில் உள்ள ஜென் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர் நாராயண் கட்கர் கூறினார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, நடைபயிற்சி ஒரு முழுமையான உடற்பயிற்சி அல்ல என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். நடைபயிற்சி அதன் முழுத் திறனையும் அடைய, ஜிம் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்ய வேண்டும், என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறினார்.
உடற்பயிற்சியின் இன்றியமையாத 4 S’களைப் பகிர்ந்து கொண்ட அவர், “உண்மையில் ஒரு நல்ல உடற்பயிற்சி திட்டத்திற்கு - வலிமை, சகிப்புத்தன்மை, நீட்சி மற்றும் நிலைத்தன்மை (Strength, stamina, stretching, and stability) அவசியம். இவை இல்லாமல், வெறுமனே நடப்பது மற்றும் உங்கள் கைகளை வேகமாக நகர்த்துவது வேலை செய்யாது என்று நிபுணர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“