Kichili Kizhangu Poolankizhangu Skin Brightening White Turmeric
முகம் பொலிவுடன் பிரகாசிக்க வேண்டுமெனில், கிச்சிலிக் கிழங்கு எனப்படும் பூலாங்கிழங்கு ஒரு சிறந்த தீர்வாகும். இது "வெள்ளை மஞ்சள்" என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, நாம் பயன்படுத்தும் அனைத்து விதமான ஹெர்பல் ஃபேஸ் பேக்குகள் மற்றும் குளியல் பொடிகளில் கிச்சிலிக் கிழங்கு ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இந்தக் கிழங்கை தனித்து பயன்படுத்தும்போது அதிகப்படியான பலன்களைப் பெறலாம்.
Advertisment
கிச்சிலிக் கிழங்கின் பயன்கள்:
முகத்தில் அதிகப்படியாக முகப்பருக்கள் வருபவர்கள் கிச்சிலிக் கிழங்கை பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
முகத்தில் உள்ள கருமையான திட்டுகள் (டார்க் பிக்மென்ட்ஸ்) மறைய உதவுகிறது.
முகத்தில் தேவையற்ற ரோமங்கள் இருப்பவர்கள், கிச்சிலிக் கிழங்கைப் பயன்படுத்தலாம்.
எப்படிப் பயன்படுத்துவது?
முகப்பொலிவிற்காகவும், தேவையற்ற ரோமங்களை நீக்குவதற்கும் கிச்சிலிக் கிழங்குடன் சில பொருட்களைச் சேர்த்து ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம்.
பொதுவான ஃபேஸ் பேக்: கிச்சிலிக் கிழங்குப் பொடியுடன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசலாம்.
தேவையற்ற ரோமங்களுக்கு: முகத்தில் அதிக ரோமங்கள் இருப்பவர்கள், கிச்சிலிக் கிழங்குப் பொடியுடன் வசம்பு பொடி, பால் மற்றும் தேன் கலந்து ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம்.
இந்த ஃபேஸ் பேக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகம் அதிகப் பொலிவுடன் பிரகாசிப்பதுடன், சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.