இருவரும் சமமாக வேலைகளை பகிர்ந்துகொள்ளும் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் அதிக திறன் பெற்றவர்களாகவும், சுறுசுறுப்பான குழந்தைகளாகவும், இளம் பருவத்தில் புத்திசாலிகளாகவும் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பல்லவி உட்டங்கி, கட்டுரையாளர்.
வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது ஒரு குழந்தையின் வருகையாகும். ஒரு குழந்தை பிறக்கும்போது நமக்கு கிடைக்கும் உணர்வுகள், மனிதர்களின் மற்ற எந்த உணர்வுகளையும்விட உன்னதமானது. மற்றொரு புறம், பெற்றோர்களாக இருவரும் சேர்ந்து குழந்தை வளர்ப்பை எதிர்கொள்வதற்கு மனதளவில் தயாராவதற்கு வழிகளே கிடையாது. முதல் முறையாக நீங்கள் பெற்றோராகும்போது, முதற்கட்ட பயணம் என்பது ரோலர் கோஸ்ட்ர் பயணம் போன்றதாகும். பெற்றோர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழலும் அவர்களின் குழந்தைகளை போன்றே தனித்துவம் வாய்ந்தது. குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில், தாய் மற்றும் தந்தை இருவரின் பங்கும் எப்போதும் விவாதத்திற்குரியது. அங்குதான் பெற்றோர் இருவரும் சமமாக குழந்தையை வளர்ப்பதில் ஏற்கும் பொறுப்பு என்ன என்பது வருகிறது.
பெற்றோரின் பொறுப்புகளை இருவரும் பகிர்ந்துகொள்வது அல்லது சமமாக இருவரும் பெற்றோரின் கடமைகளை செய்வது என்ற கருத்தாக்கம் தற்போது இந்திய குடும்பங்களில் நிலவி வருகிறது. முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட கருத்துக்களை தகர்க்கும் வகையில், குழந்தை வளர்ப்பு தொடர்புடைய பொறுப்புக்களை பகிர்ந்துகொள்வது மட்டுமே சமமாக பெற்றோரின் கடமைகளை பகிர்ந்துகொள்வதாகாது. அது வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வது, குடும்பத்திற்கான வருமானத்திற்கு உதவுவது மற்றும் இருவருக்கும் தனித்தனியான நேரங்களை மகிழ்ச்சியாக கழித்துக்கொள்வது ஆகிய அனைத்தும் அடங்கியதாகும். நமது பாரம்பரிய குடும்ப முறையான, ஆண் வேலைக்கு வெளியே செல்வது மற்றும் பெண் வீட்டில் இருப்பது போன்றதற்கும், முழுநேர பணியில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதான, ஆண் வேலைக்குச் செல்வது, பெண்ணும் முழு நேர பணிக்கும் சென்றுகொண்டு, வீட்டின் வேலை மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றையும் செய்வது, இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. உங்கள் குழந்தைகளுக்கான பொறுப்புகளையும் நீங்கள் இருவரும் சமமாக பகிர்ந்துகொள்வது, உங்கள் வாழ்க்கையை நன்றாக எடுத்துச்செல்வதற்கும், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் மற்றும் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
மும்பை மையத்தின் கணக்கெடுப்பு, கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தில், 70 சதவீத தந்தைமார்கள் தங்களின் பயண நேரத்தை குறைத்துவிட்டதாக கூறுகிறது. இதனால் குறைந்தபட்சம், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நாளொன்று 2 மணி நேரம் கூடுதலாக செலவிடுகின்றனர். இது தாய்மார்களின் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, அவர்கள் வீட்டிலும், பணியிடத்திலும், மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவுகிறது. மேலும் பாலின வழக்கங்களை (gender stereotype) அனைத்து இடங்களிலும் தகர்க்கிறது. இருவரும் குழந்தை வளர்ப்பை சமமாக பகிர்ந்துகெள்ளும்போது, குழந்தை உள்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அது நன்மையை உறுதி செய்கிறது. மிக முக்கியமாக அது அடுத்த தலைமுறைக்கு சரியான எடுத்துக்காட்டாக உள்ளது.
இருவரும் குடும்பம் மற்றும் குழந்தை வளர்ப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
குழந்தையின் கற்கும் திறன் வீடுகளில் இருந்துதான் துவங்குகிறது என்று கூறுவதுபோல், குழந்தை பெரியதோ அல்லது சிறியதோ எந்த வேலையாயிருப்பினும், அதில் பாலின வேற்றுமை கிடையாது என்பதை முக்கியமாக குழந்தை தெரிந்துகொள்கிறது. குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இருக்கும்போது, வீட்டு வேலைகள், பொழுதுபோக்குகள், இணையர்கள் இருவரும் தங்களின் பணிகளை எவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை பார்க்கும்போது அவர்களுக்கு வீட்டில் சமத்துவ உணர்வு ஏற்படுவதோடு, எதிர்காலத்திலும் அவர்கள் இதுபோன்று இருக்க முயல்வார்கள். அப்போது வீட்டில் இருவரும் சமம் என்பது இயல்பாகிவிடும். இருவரும் ஒன்றாக குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சேர்ந்து உழைக்கும்போது, அது குழு உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகவும், குழந்தையின் வாழ்வில் நீண்ட நாள் பயனையும் தரக்கூடியதாக இருக்கும். குடும்பம் என்றால் என்ன? பாதுகாப்பு குறித்து நன்றாக புரிந்துகொள்வதற்கு உதவும். பாலின வழக்கங்களை (gender stereotype) தவிர்ப்பதற்கும் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்கும். இருவரும் சமமாக வேலைகளை பகிர்ந்துகொள்ளும் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் அதிக திறன் பெற்றவர்களாகவும், சுறுசுறுப்பான குழந்தைகளாகவும், இளம் பருவத்தில் புத்திசாலிகளாகவும் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மனதிடம் மிகச்சிறப்பாகவே உள்ளது. செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாவற்றை நன்றாக அறிந்துகொண்டு, அவர்கள் பிரச்னைகளை அமைதியாக கையாள்கிறார்கள். சவால்களை திறம்பட கையாள்வதற்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
குழந்தைகளை இருவரும் சேர்ந்து வளர்க்கும் புதிய நடைமுறையை வயதானவர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள்?
பொறுமை மற்றும் தொடர்புகொள்ளும்திறன் ஆகியவை குழந்தைகளை ஒன்று சேர்ந்து வளர்ப்பதில் முக்கியமான காரணிகள். நாம் இத்தனை காலங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இது மாறுபட்டது என்பதால், வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் இதுபோன்ற திடீர் மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்வது மிகமிக கடினம். எனினும் இனி வரக்கூடிய தலைமுறைக்கு இது மிக முக்கியமான ஒன்று என்பதால், நாம் நிச்சயம் இந்த மாறுபட்ட வாழ்க்கை முறையை பரிசோதித்து பார்க்க வேண்டும். இதுவரை பாரம்பரியமாக தாங்கள் கடைபிடித்து வந்த ஒன்றை மாற்றிக்கொள்ள துவங்கியிருப்பார்கள், எனவே முதியவர்களுக்கு இதுகுறித்து தெளிவாக விளக்குவது மிகமிக அவசியம். குடும்பத்தினர் மட்டுமல்ல இந்த சமூகத்திற்கும் குடும்ப சுமை, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை இருவரும் சேர்ந்து பகிர்ந்துகொள்வதை எடுத்துக்கூறுவது மிகமிக அவசியமான ஒன்றாகும். அவர்களும் தங்களின் அன்றாட வாழ்வில் அதை வழக்கமாக்கிக்கொண்டு அதை சமூகத்தில் இயல்பானதாக மாற்றவேண்டும். அப்போதான் அது அனைவருக்கும் பயனளிக்கும்.
ஏனெனில், இந்த சமூகமும், விளம்பரப்படுத்தப்படும் பொருட்கள் மூலம் ஆழ்மனப்பதிவான பாலின வழக்கங்கள் நம்மிடையே மீண்டும், மீண்டும் எட்டிப்பார்க்கும் ஒன்றாகும். ஒரு பொறுப்புள்ள பெற்றோராக, இதுபோன்ற பிரச்னைகள் குறித்து பேசி, அதை உடைக்கும் வகையிலான செயல்களை செய்ய வேண்டும். உண்மையாக இருவரும் பணிகளை பகிர்ந்துகொள்வது எப்படி இருக்குமென்றால், தாய்க்கு மன மற்றும் உடலளவிலான ஆதரவை கொடுத்து, குழந்தையை பார்த்துக்கொள்வது, தன் பணி தொடர்பானவற்றை கையாள்வது மற்றும் தனக்கான நேரத்தை செலவிடுவது என அனைத்தும் அவருக்கு சுலபமாகி, தன்னை புதுபித்துக்கொள்வதற்கான வாய்ப்பாக அமையும். இருவரும் குழந்தை வளர்ப்பை பகிர்ந்து கொள்வது, குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக அமைகிறது. இந்த மன அழுத்தம் குழந்தை பிறந்த பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் ஒன்றாகும்.
குழந்தையை வளர்க்கும் பொறுப்பை சமமாக பகிர்ந்துகொள்வது குழந்தை உள்ளிட்ட அனைவருக்கும் நல்லது. நாம் அதையும், அது குறித்த விவாதங்களையும் தற்போது துவங்கியுள்ளோம். தாய் மட்டுமே குழந்தை பாரமரிக்க வேண்டும் என்றால், அதை நாம் ஆங்கிலத்தில் mothering அதாவது தாய் மட்டுமே வளர்ப்பதான பொருளில்தான் அதை அழைக்க வேண்டும்.
இக்கட்டுரையை எழுதியவர் சூப்பர்பாட்டம் நிறுவனத்தின் நிறுவனர்.
தமிழில் : R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.