New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Ksup.jpg)
Kiki Shantanu Youtube Channel Viral Content Videos Tamil News
Kiki Shantanu Youtube Channel முழுக்க முழுக்க தங்களின் காதல் கதையைப் பகிர்ந்துகொள்ளும் இந்த பதிவில், எடிட்டிங் டச் வேற லெவல்.
Kiki Shantanu Youtube Channel Viral Content Videos Tamil News
சின்னதிரையில் 'மானாட மயிலாட' மற்றும் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, மக்களின் ஃபேவரைட் தொகுப்பாளினி லிஸ்டில் இடம் பிடித்தவர் கீர்த்தி. இப்படிச் சொல்வதைவிட 'கிகி' என்று சொன்னால்தான் அனைவர்க்கும் பரீட்சையம். பிரபல இயக்குநரும் பாக்யராஜின் மருமகளும் சார்மிங் நடிகர் ஷாந்தனுவின் மனைவியுமான இவர் நடனக் கலைஞரும்கூட. தனக்கென்று தனிப்பட்ட வகையில் நடனப் பள்ளியையும் திறந்திருக்கிறார். இந்நிலையில், தான் கணவர் சாந்தனுவோடு இணைந்து யூடியூப் சேனலில் இவர்கள் கொடுக்கும் கன்டென்ட் அனைத்தும் ட்ரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.
சுமார் 11 மாதங்களுக்கு முன்பு, 'With Love Shanthanu Kiki' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சேனலின் முதல் கன்டென்ட்டே வைரல். 'லிப்ஸ்டிக்' எனும் பெயரில் மியூசிக் ஆல்பம் அது. இதனைத் தொடர்ந்து தங்களின் அன்றாட வாழ்க்கைமுறை பதிவு, பூர்ணிமா மற்றும் பாக்யராஜ் இருவரின் பிறந்தநாள் பதிவு, சுற்றுலா பதிவு என்று ஏராளமான காணொளிகளை பதிவேற்றியிருக்கின்றனர்.
கிகி சாந்தனுவின் திருமண வீடியோ மில்லையன் வியூஸ்களை பெற்று, ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றது. பிரபு தேவாவோடு இணைந்து சாந்தனு நடனமாடும் ஓர் காணொளி 2.5 மில்லியன் வியூஸ்களுக்கு அதிகம் பெற்று இவர்களின் சேனலின் அதிக வியூஸ் கொண்ட வீடியோவாக இருக்கிறது. நடனம், இசை மற்றும் முழுநீள என்டெர்டெயின்மெண்ட்டுக்கு குறைவில்லாமல் இருக்கிறது சாந்தனு கிகி சேனல்.
அதிலும் தற்போது 'தெளிவா ஒளறுவோம்' என்கிற பெயரில் புதிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கின்றனர். முதல் எபிசோடே லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்று, ட்ரெண்டிங்கில் இருக்கிறது. முழுக்க முழுக்க தங்களின் காதல் கதையைப் பகிர்ந்துகொள்ளும் இந்த பதிவில், எடிட்டிங் டச் வேற லெவல். இருவரும் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் குறைகூறிக்கொண்டு, இவர்கள் செய்யும் அட்ராசிட்டி சான்ஸே இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.