Advertisment

கிம் ஜாங் உன் உடல்நிலை ‘கடுமையான' ஆபத்தில் இருக்கலாம்: சி.என்.என்

வடகொரியாவின் நடவடிக்கைகள் எதைக் குறிக்கின்றன என்பதைக் கணிப்பதில் நமக்கு இருக்கும் முன் அனுபவத்தை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். எனவே, தற்போது, எந்தவொரு அவசர முடிவுகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிம் ஜாங் உன்  உடல்நிலை ‘கடுமையான' ஆபத்தில் இருக்கலாம்: சி.என்.என்

கடந்த வாரம் நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சைக்குப் பின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்  மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்த செய்திக்குப் பின் , கிம் ஜாங் உன் உடல்நலம் குறித்த விவரங்களை ஆய்வு செய்தி வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

கிம் ஜாங் உன்  இறந்துவிட்டாரா? (அ) உயிருடன் இருக்கிறாரா ? என்பது டிரம்ப் நிர்வாகத்துக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று அடையாளம் காண விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்குப் பின் கிம் ஜாங் உன் உடல்நிலை "கடுமையான ஆபத்தில் இருக்கலாம்" என்று இந்த விஷயத்தில் நேரடியாக தொடர்பில் இருக்கும் அமெரிக்கா அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சி.என்.என்  நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

சியோலை தளமாகக் கொண்டு இயங்கும் டெய்லி என்.கே  என்கிற ஆன்லைன் செய்தி நிறுவனம், கிம் ஜாங் உன் ஒரு இருதய அறுவை சிகிச்சைமுறைக்கு ​​உட்பட்டதாகவும், தற்போது குனமடைந்து விட்டதாகவும் தனித்தனியாக  செய்தி வெளியிட்டிருந்தது .

வட கொரியர் ஒருவரின் அடிப்படையாகக் கொண்டு, இந்த செய்தி வெளியாகியிருப்பதால் இதை உடனடியாக சரிபார்க்க இயலவில்லை.

வட கொரியா அரசின்  மிகவும்  பாதுகாக்கப்பட்ட ரகசியங்களில் ஒன்றாக, அந்நாட்டுத்  தலைவரின் உடல்நலம் குறித்த செய்திகள் கருதப்படுகிறது.  இது பொதுவாக அரசின் உள் வட்டத்தில் இருக்கும் ஒரு சிலரால் மட்டுமே அறியப்படுகிறது. வட கொரிய நாட்டின் மிக முக்கிய நாட்களில் ஒன்றாக கருதப்படும் கிம் II சுங்-ன், பிறந்தநாள் விழாவில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை. அதிலிருந்து, அவரைப் பற்றிய ஊகங்கள் பெருகி வருகின்றன. கிம் ஜாங் உன்-னின் தாத்தாவான கிம் II சுங், வட கொரியா தேசத்தை தோற்றுவித்தவராக கருதப்படுகிறார். அவரின், பிறந்தநாள் நினைவு விழா கடந்த ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்பட்டது.

வெள்ளை குதிரை:  36 வயது நிரம்பிய கிம், அதிகம் புகைப்பிடிப்பவர் . சமீப நாட்களில் இராணுவ போர் பயிற்சிகளில் தோன்றும் காட்சிகளும், நாட்டின் மரியாதைக்குரிய ஒன்றாக கருதப்படும், பைக்டு மலைகளில் வெள்ளை குதிரையில் சவாரி செய்யும் காட்சிகளும், அரசு ஊடகங்களில் காட்டப்பட்டது . ஜப்பானிய காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கு, அவரது தாத்தா  கெரில்லா யுக்தியைப் பயன்படுத்தினார் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது.

கிம் II சுங் பிறந்தநாள் கொண்டாட்டங்களில், கிம் இல்லாத காரணங்களை ஊகிப்பது “பொருத்தமற்றது” என்று வட கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கிம் இந்த ஆண்டு மட்டும் 17 முறை பொது இடங்களில் தோற்றமளித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 84-ஆக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பெருந்தோற்றை தடுக்க வட கொரியா போராடும் சூழ்நிலையில்,    கொண்டாட்டங்களும் மற்றும் வேறு சில முக்கிய நிகழ்வுகளும் அந்த நாட்டில் குறைந்த அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக, பொது நிகழ்வுகளில் கிம் உடனிருக்கும் பாதுகாப்பு  பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருன்தனர் என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

ஒருங்கிணைப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட  இலாப நோக்கற்ற அமைப்பாக டெய்லி என்.கே  நிறுவனம் செயல்படுகிறது.  அவ்வப்போது சியோல் அதிகாரிகளுக்கு தேவைப்படும்  தகவல்களையும் இந்த செய்தி நிறுவனம் வழங்குகிறது . அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான தேசிய எண்டோமென்ட்  நிறுவனம், கடந்த ஆண்டு 400,000 டாலர்களை இந்த செய்தி நிறுவனத்துக்கு  வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவைப் பற்றிய செய்தியை சரிபார்ப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.  மேலும், வடகொரியாவின் நடவடிக்கைகள் எதைக் குறிக்கின்றன என்பதைக் கணிப்பதில் நமக்கு இருக்கும் முன் அனுபவத்தை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். எனவே, தற்போது, எந்தவொரு அவசர முடிவுகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது" என்று கொரிய தீபகற்பத்தில் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி மின்தாரோ ஓபா கூறினார்.

Kim Jong Un
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment