கொடையாளரும், கலை பொருள்கள் சேகரிப்பாளருமான கிரண் நாடாருக்கு, இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனைனால் "செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானர்" (நைட் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்) வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கலைத் துறையில் நாடாரின் சிறந்த பங்களிப்பு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலாச்சாரத்தில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் இந்திய-பிரெஞ்சு கலாச்சார உறவுகளை வளர்ப்பதில் அவரது முக்கிய பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் மிக உயர்ந்த பிரெஞ்சு குடிமகன் விருது வழங்கப்படுகிறது.
கிரண் நாடார், இந்திய-பிரெஞ்சு கலாச்சார உறவுகள் மற்றும் கலை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தின் (KNMA) தலைவராகவும் அவர் உள்ளார்.
இந்த விருது தொடர்பாக அவர், "செவாலியர் டி எல்'ஓர்ட்ரே நேஷனல் டி லா லெஜியன் டி'ஹானூர்' எனக்கு வழங்கப்படுவது ஒரு முழுமையான பாக்கியமாகும், மேலும் இந்த மகத்தான கவுரவத்திற்காக பிரெஞ்சு அரசாங்கத்திற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்.
மேலும், கலாச்சார வெளியில் பிரான்சுடன் KNMA நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. பிரான்ஸுடனான எங்கள் கூட்டு பல்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைப்பதற்கும் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கும் கருவியாக உள்ளது” என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில், KNMA அல்காசி அறக்கட்டளை மற்றும் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்துடன் கைகோர்த்து, இந்தியாவில் இதுவரை காட்டப்படாத பிரெஞ்சு புகைப்படக் கலைஞர்களின் அசல் படங்களின் மிகப்பெரிய கண்காட்சியான “கன்வர்ஜஸ்” ஐ உருவாக்கியது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்திற்கான பரிசாக இந்தியா முழுவதும் பிரான்சால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு மாத கலாச்சார விழாவான "Bonjour India 2022" இன் ஒரு பகுதியாக இந்த கண்காட்சி இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
கிரண் நாடார், பிரபல தொழில் அதிபர் ஷிவ் நாடாரின் மனைவி ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“