Kiss Day 2023: இங்கிலாந்து நாட்டில் உருவான கிஸ் டே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகிறது. முத்தம் என்பது இரண்டு பேர் தமக்குள் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவும் பரிமாறிக் கொள்ளவுமான ஒரு வழி.
முத்தமிடும் போது உடலிலிருந்து அட்ரீனலின் மற்றும் நோரடனினலின் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கிறது. அப்போது உங்கள் இதயத் துடிப்பு அதிகரித்து, சில ரசாயன மாற்றங்கள் நிகிழ்ந்து உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆற்றலும் கிடைக்கிறது.
நீங்கள் முதல் முதலாக ஒருவரை முத்தமிடுவது என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பேரனுபவம். முதல் முத்தத்தின் போது பெரோமோன்ஸ், டொபமைன், நோர்ப்பின்ப்ரின் மற்றும் சிரோட்டினின் ஆகிய மூளையின் மகிழ்வுப் பகுதியை தூண்டும் ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்கின்றன. இதனால் இதயம் வேகமாக துடிக்கும், இது உடலில் மற்றும் மனத்தில் மகிழ்ச்சி அலையை உருவாக்கி மீண்டும் மீண்டும் முத்தமிடும் ஆவலை உங்களுக்குள் விதைத்துவிடும்.
இதுவே முத்தத்தின் உள்ளார்ந்த ரகசியம்.
உடலுக்குள் நிகழும் வேதியல் விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ கோடிக்கணக்கான உயிர்கள் தினம் தினம் முத்தத்தில் திளைக்கிறார்கள்.
அந்த வகையில் காதலர் வாரத்தில் வரும் கிஸ் டே ஆனது, அன்பை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்தை உயிர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உங்கள் காதல் மங்கத் தொடங்கும் போதெல்லாம், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்ச நெருக்கத்தின் மூலம் நீங்கள் காதலை மீண்டும் தொடங்கலாம்.
கிஸ் டே அன்று உங்கள் வாழ்க்கை துணைக்கு நீங்கள் அனுப்ப சில படங்கள், மெசேஜஸ், ஸ்டேட்டஸ் இங்கே.
*உன் முத்தத்திற்கு என் கவலைகள் அனைத்தையும் போக்கும் ஆற்றல் உண்டு. ஹேப்பி கிஸ் டே, என் அன்பே.

*என் உதடுகளில் உன்னிடமிருந்து ஒரு இனிமையான முத்தத்தை விட பெரிய பரிசு எதுவும் இல்லை. முத்த தின வாழ்த்துக்கள்!

The greatest moment of joy is when I am kissing you on your lips.

*சில சமயங்களில் உன் மீதான என் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பேன்; அதனால்தான் நான் வார்த்தைகளை விட முத்தங்களை விரும்புகிறேன். ஹேப்பி கிஸ் டே!

Today, all I want is to kiss you on your lips. Happy Kiss Day my love.

*முத்தம் ஒருவரையொருவர் மீண்டும் மீண்டும் காதலிக்க உதவுகிறது. இனிய முத்த நாள்.

உன் முத்தத்தால் என்னை உலகம் முழுவதையும் மறக்க வைக்கிறாய். ஐ லவ் யூ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“