சமையல் என்பது பொதுவாக பலருக்கும் பிடிக்காத ஒன்று. எனவே, சமையலறையில் அதிக நேரம் செலவழிக்காமல் முடிந்தவரை சீக்கிரம் சமைக்கவும், சமையல் தொந்தரவு இல்லாததாகவும் இருக்க பலர் விரும்புகிறார்கள்.
Advertisment
எனவே, நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன.
சமையலறையை சுத்தம் செய்ய
நாம் அனைவரும் சமைக்க விரும்புகிறோம், ஆனால் அவை சமையலறையில் விட்டுச்செல்லும் கறைகளைப் போக்குவது தலைவலியாக இருக்கிறது. அவற்றை சுத்தம் செய்யவே அதிக நேரம் எடுக்கும். இதற்கு ஒரு எளிய ஹேக்’ பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துவது.
வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை பேஸ்ட்டாக கலந்து, உங்கள் சமையலறை கவுண்டர்டாப் மற்றும் பிளெண்டர் போன்றவற்றில் உள்ள கறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தவும். இது உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தரும்.
காப்பர் பாத்திரத்தை சுத்தம் செய்ய
ஒரு துணியில் சிறிது கெட்ச்அப் எடுத்து, அதை உங்கள் காப்பர் பாத்திரம் முழுவதும் தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் புதியது போல் இருக்கும்.
அதேபோல, ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருட்களை சுத்தம் செய்ய ஆல்கஹால் பயன்படுத்தலாம்.
பழைய பாத்திரங்களை சுத்தம் செய்ய
பழைய சமையல் பாத்திரங்கள் அல்லது உலோகப் பொருட்களில் உள்ள அழுக்கு மற்றும் கிரீஸை அகற்றுவதற்கான எளிய வழி இதுவாக இருக்கும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் சிறிது சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, கரைசலைக் கிளறி, உங்கள் கலைப்பொருட்கள் மற்றும் பாத்திரங்களை கரைசலில் நனைக்கவும்.
சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுத்து கழுவவும். வித்தியாசத்தைப் பார்க்கவும்.
கிரீஸ் கறை நீங்க
சமையலறையின் மேற்பரப்பைச் சுத்தம் செய்த பிறகும், அடுப்பைச் சுற்றி திடமான கிரீஸ் படிவுகளை நீங்கள் அடிக்கடி பார்ப்பீர்கள், இதற்கு பேக்கிங் சோடாவை ஒரு பேஸ்ட் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து, இந்த பேஸ்ட்டை கிரீஸ் மற்றும் கறை உள்ள மேற்பரப்பில் தடவி ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர் அவற்றை சிறிது சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் அல்லது துடைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“