/indian-express-tamil/media/media_files/2025/05/28/cjdB6Riw5nSAwPwuqpwh.jpg)
Kitchen cleaning tips Greasy Gas stove cleaning
நம்மில் பலருக்கு சமையலறை கவுண்டர் டாப்பும், கேஸ் அடுப்பும் எப்பவுமே ஒரு மாதிரி எண்ணெய் பிசுபிசுப்புடனும், பிடிவாதமான கறைகளுடனும் இருப்பது ஒரு பெரும் சவாலாக இருக்கும். தினமும் சமையல் செய்யும் போது படியும் அழுக்குகள், சில சமயம் எவ்வளவு சுத்தம் செய்தாலும் போகாத அளவுக்குப் படிந்துவிடும். ஆனால், கவலை வேண்டாம்! உங்கள் சமையலறையை மீண்டும் பளபளக்க வைக்கும் ஒரு அசத்தலான, சுலபமான ரகசியம் இதோ!
கிச்சன் கவுண்டர்டாப்பை சுத்தம் செய்வது எப்படி?
கேஸ் அடுப்பு மற்றும் கவுண்டர்டாப்பில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் அழுக்குகளை நீக்க, முதலில் ஒரு துணியால் அடுப்பைத் துடைக்கவும். பிறகு, சிறிது துருவிய விம் சோப், சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான கலவையாக்கவும். தண்ணீர் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது, மென்மையான ஒரு ஸ்க்ரப்பரை எடுத்து, நாம் தயாரித்த கெட்டியான கலவையில் லேசாக தொட்டு, அடுப்பின் எண்ணெய் பிசுபிசுப்புள்ள இடங்கள் அனைத்திலும், குறிப்பாக பர்னர்களுக்கு அடியிலும், கவுண்டர் டாப் பகுதிகளிலும் நன்கு தேய்த்து விடவும். அடுப்பின் அடியில் இருக்கும் அழுக்கு படிந்த இடங்களையும் விடாமல் தேய்க்க மறக்காதீர்கள். கலவையைத் தேய்த்த பிறகு, அதை அப்படியே 10 நிமிடங்கள் ஊற விடவும்.
பிறகு, ஒரு ஈரமான துணியால் துடைத்தால், அழுக்குகள் நீங்கிப் பளபளவென்று மாறும். துணியை மீண்டும் மீண்டும் தண்ணீரில் அலசி பிழிந்து துடைக்கலாம். இவ்வளவுதான்! ஒரு சில நிமிடங்களில், உங்கள் சமையலறை கவுண்டர் டாப்பும், கேஸ் அடுப்பும் சுத்தமாக, பளபளப்பாக மாறிவிடும்.
இந்த சுலபமான மற்றும் பயனுள்ள முறை, உங்கள் சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க உதவும். உங்கள் வீட்டிலும் இந்த முறையை முயற்சி செய்து, உங்கள் சமையலறையைப் பளபளக்க வையுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.