ஒவ்வொரு இந்திய சமையலறையிலும், இரும்பு சமையல் பாத்திரங்கள் இன்றியமையாத பகுதியாகும். இரும்பு பாத்திரங்களில் சமைப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. இரும்பு பாத்திரங்களில் உணவை சமைப்பது, இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. சமைக்கப்படும் உணவில் இரும்புச் சத்து கலந்து ஆரோக்கியமான உணவாக அமைகிறது. சமையலுக்கு எண்ணெய் குறைவாக பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கும் நல்லது.
இருப்பினும் சரியாக பராமரிக்கவிட்டால் இரும்பு பாத்திரங்கள் விரைவில் துருப்பிடித்து விடும்.
மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா, இரும்புச் சட்டிகளைப் பராமரிக்க ஒரு எளிய உதவிக்குறிப்பைப் பகிர்ந்து கொண்டார்.
உங்கள் இரும்பு பாத்திரங்களில் துருப்பிடித்திருக்கிறதா? உங்கள் இரும்புச் சட்டிகளைப் பராமரிக்க இந்த எளிய உதவிக்குறிப்பைப் பின்பற்றுங்கள்! என்று இன்ஸ்டாகிராமில் அவர் கூறினார்.
எப்படி செய்வது?
சமையல் பாத்திரங்களைக் கழுவி உலர வைக்கவும். நீரை அகற்றுவதற்கு நீங்கள் அடுப்பில் சிறிது சூடாக்கலாம்.
காய்ந்ததும் பாத்திரம் முழுவதும் கடுகு எண்ணெயை தடவவும்.
முடிந்ததும், மென்மையான துணி அல்லது டிஷ்யூ பயன்படுத்தி, அதிகப்படியான எண்ணெயைத் துடைக்கவும்
பாத்திரத்தை உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
இது உங்களின் அனைத்து இரும்பு வாணலிகள் மற்றும் பாத்திரங்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும், என்று பதூரியா கூறினார்.
இது ஏன் முக்கியமானது?
இரும்பு தவாவை சீசன் செய்வது மிகவும் முக்கியம், ஏனெனில் சீசன் செய்யாத தவாவில் மாவு ஒட்டிக்கொண்டிருக்கும் என்று செஃப் சஞ்சீவ் கபூர் கூறினார்.
*இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது எலுமிச்சை சாறு, சிட்ரிக் அல்லது அசிடிக் உள்ள எதையும் சேர்க்க வேண்டாம்,
*உணவை இரும்பு பாத்திரத்தில் சமைத்தவுடன், அதில் வைத்து விடாதீர்கள். உடனடியாக அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இது உணவு கருப்பு நிறமாக மாறாமல் தடுக்க உதவுகிறது.
இரும்பு தவாவை எப்படி சீசனிங் செய்வது?
*வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதை எண்ணெயில் தோய்த்து, தவாவில் தடவவும். அது சூடாகட்டும். தவா இப்போது சீசன் செய்யப்பட்டு விட்டது.
*வெங்காயத்திற்குப் பதிலாக மஸ்லின் துணியையும் பயன்படுத்தலாம். மஸ்லின் துணியை பயன்படுத்தி இரும்பு தவாவின் மீது எண்ணெயைத் தடவி, தவாவை சூடாக்கவும்.
பானைகளில் இருந்து மஞ்சள் கறையை அகற்றுவது எப்படி
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பேக்கிங் சோடா பேஸ் மூலம் அவற்றை தேய்க்க வேண்டும். அதை 30 நிமிடங்கள் வைத்து, பின்னர் தண்ணீரில் கழுவவும்.
அடுத்தமுறை சமைக்கும் போது மறக்காமல் இந்த குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“