சமையலறையில் நேரத்தைச் செலவிடுவது, அன்பானவர்களுக்காக உணவைச் சமைப்பது ஆகியவை வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாகும்.
நீங்கள் ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதில் நேரத்தையும், சக்தியையும் செலவழித்தால், உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க ஏன் கடுமையான, தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?
இங்கு இயற்கை தீர்வுகளைப் பயன்படுத்தி நீங்களே சொந்தமாக வீட்டில் கிச்சன் க்ளென்சர் ரெசிபி உள்ளது.
தேவையான பொருட்கள்
1 கப் காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகர்
1 கப் தண்ணீர்
3 சொட்டு டீ ட்ரீ எண்ணெய்
3 சொட்டு கிரேப்ஸ் எண்ணெய்
ஸ்பிரே பாட்டில்
எப்படி செய்வது?
/indian-express-tamil/media/media_files/kubcyRc4U4HDvLYgnFjj.jpg)
ஸ்பிரே பாட்டிலில் வினிகரை ஊற்றவும், பின்னர் தண்ணீர் ஊற்றவும். மெதுவாக மூன்று சொட்டு டீ ட்ரீ எண்ணெய் மற்றும் மூன்று சொட்டு கிரேப்ஸ் எண்ணெய் பாட்டிலில் ஊற்றவும்.
பயன்படுத்துவதற்கு முன், அனைத்து பொருட்களையும் நன்கு கலக்க பாட்டிலை நன்கு குலுக்கவும். நேரடியாக கிச்சன் மேற்பரப்பில் அல்லது கிச்சன் துண்டு மீது தெளித்து, சுத்தமாக துடைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் பாட்டிலின் மேற்புறத்தில் தங்கிவிடும், எனவே எந்த பரப்புகளிலும் தெளிப்பதற்கு முன் நன்கு குலுக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“