கிச்சன் கவுண்டர் டாப்பில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் உப்பு நீர் படிந்து வெள்ளையான படலமாக மாறுவது பெரும்பாலான வீடுகளில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. குறிப்பாக போர்வெல் நீர் பயன்படுத்தும் வீடுகளில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த உப்பு கரைகள் கவுண்டர் டாப்பின் அழகைக் கெடுப்பதுடன், நாளடைவில் சுத்தம் செய்ய மிகவும் கடினமாகிவிடும். ஆனால், எந்த விதமான ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாமல், கை வலிக்கத் தேய்க்காமலேயே உங்கள் கவுண்டர் டாப்பை புதுப்பொலிவுடன் மின்ன வைக்கலாம்.
இந்த எளிய சுத்தம் செய்யும் முறைக்கு உங்களுக்கு இரண்டு பொருட்கள் மட்டுமே தேவை:
ஃப்ளோர் கிளீனர்: எந்த பிராண்டின் ஃப்ளோர் கிளீனராக இருந்தாலும் சரி
தேங்காய் எண்ணெய்
எப்படி செய்வது?
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். அதில், இரண்டு மூடி ஃப்ளோர் கிளீனரை ஊற்றவும்.
பின்னர், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும். உங்கள் கவுண்டர் டாப்பில் உப்பு கரைகளின் அளவு அதிகமாக இருந்தால், தேங்காய் எண்ணெயின் அளவை சற்றுக் கூட்டிக்கொள்ளலாம். இந்த இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு லிக்குவிடை தயார் செய்யவும். இந்த லிக்குவடை, உப்பு கரைகள் படிந்த கவுண்டர் டாப் பகுதியில் சமமாகப் பரப்பி விடவும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/4q0a4Prdd4GLpWknpIX0.jpg)
இப்போது, ஒரு பழைய ஸ்டீல் ஸ்க்ரப்பரை எடுத்துக்கொண்டு, லிக்குவடை பரப்பிய பகுதிகளில் மெதுவாகத் தேய்க்கத் தொடங்கவும். தேங்காய் எண்ணெய் ஃப்ளோர் கிளீனருடன் கலந்து நுரைக்கத் தொடங்கும்.
அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. சுமார் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை லேசாகத் தேய்த்தாலே போதும். தேய்க்கும்போதே உப்பு கரைகள் நீங்குவதை நீங்கள் பார்க்க முடியும்.
மூன்று முதல் நான்கு நிமிடங்கள் தேய்த்த பிறகு, ஒரு ஈரமான காட்டன் துணியை எடுத்து, தண்ணீரில் நன்றாகப் பிழிந்து, கவுண்டர் டாப்பைத் துடைக்கவும். நுரை மற்றும் உப்பு கரைகள் முழுமையாக நீங்கும் வரை ஒன்று அல்லது இரண்டு முறை துடைக்கலாம். நீங்கள் விரும்பினால், தண்ணீர் ஊற்றி கழுவவும் செய்யலாம்.
பளபளப்பிற்காக:
கவுண்டர் டாப் காய்ந்த பிறகு, ஒரு சுத்தமான, ஈரமான காட்டன் துணியில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு, அதை கவுண்டர் டாப் முழுவதும் தடவி விடவும். இது கவுண்டர் டாப்பைப் பளபளப்பாக மாற்றுவதுடன், எதிர்காலத்தில் உப்பு கரைகள் படிவதையும் குறைக்கும். அதிக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தாமல் கவனமாக இருக்கவும், இல்லையெனில் கவுண்டர் டாப் பிசுபிசுப்பாக மாறிவிடும்.
இந்த முறையை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், உங்கள் கவுண்டர் டாப் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும்.