முழு அக்ரூட் பருப்புகளை உடைக்கவே உங்களுக்கு நிறைய சக்தி வேண்டும். சுத்தியலைப் பயன்படுத்துவது உட்பட அனைத்து ஹேக்குகளையும் நீங்கள் முயற்சித்திருக்கலாம்சுத்தியலைப் பயன்படுத்தாமல் அவற்றை உடைக்க சில உடனடி ஹேக்ஸ் இங்கே உள்ளன.
இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சர் தீப்தி கபூரின் கூற்றுப்படிஅக்ரூட் பருப்பை தண்ணீரில் சில நிமிடங்கள் வேகவைத்தால் போதும்.
ஹேக்கிற்குள் நுழைவதற்கு முன்வால்நட்ஸ் ஏன் உங்களுக்கு நல்லது என்பதை இங்கே பார்க்கலாம்.
பருப்புகள்குறிப்பாக பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள்இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகின்றன என்று உணவியல் நிபுணர் பயல் சர்மா (senior dietician, Dharamshila Narayana Suprspecialty Hospital) கூறினார்.
அவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றனஅவை ரத்த சர்க்கரை அளவு மெதுவாக அதிகரிக்க வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது.
* முழு வால்நட்ஸை தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
* அவற்றை முழுமையாக உலர வைக்கவும்
* இப்போது பருப்பை விரலில் வைத்து அழுத்தும் போது, வெளியே இருக்கும் தோல் எளிதில் உடைந்து பருப்பு வெளிவரும்
- கொதித்த பிறகு வால்நட் முழுவதுமாக உலர்த்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், என்று கபூர் வலியுறுத்தினார்.
வால்நட்டைக் கையால் உடைக்க முயற்சிக்கும் முன் கொதிக்க வைப்பது சற்று எளிதாக இருக்கும்.ஆனால் சில நிமிடங்கள் கொதித்த பிறகுஉங்கள் கைகளைப் பாதுகாக்க ஒரு துண்டு அல்லது கையுறைகளைப் பயன்படுத்திஅதை உடைக்க முயற்சிக்கவும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்ஏனெனில் நட்ஸ் இன்னும் சூடாக இருக்கலாம்மேலும் ஷெல் எப்போதும் எளிதில் உடைந்து போகாது. உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது உங்கள் விரல்களைப் பயன்படுத்தி ஷெல்லை உடைக்க முயற்சிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடன https://t.me/ietamil“