/indian-express-tamil/media/media_files/5PFjzcMSjPUUOPbXGunU.jpg)
Useful hack to crack open walnuts with your bare hands
இது குளிர்காலம், பெரும்பாலான மக்கள் நட்ஸ் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், முழு அக்ரூட் பருப்புகளை உடைக்கவே உங்களுக்கு நிறைய சக்தி வேண்டும். சுத்தியலைப் பயன்படுத்துவது உட்பட அனைத்து ஹேக்குகளையும் நீங்கள் முயற்சித்திருக்கலாம்,
சுத்தியலைப் பயன்படுத்தாமல் அவற்றை உடைக்க சில உடனடி ஹேக்ஸ் இங்கே உள்ளன.
இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சர் தீப்தி கபூரின் கூற்றுப்படி, அக்ரூட் பருப்பை தண்ணீரில் சில நிமிடங்கள் வேகவைத்தால் போதும்.
ஹேக்கிற்குள் நுழைவதற்கு முன், வால்நட்ஸ் ஏன் உங்களுக்கு நல்லது என்பதை இங்கே பார்க்கலாம்.
பருப்புகள், குறிப்பாக பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள், இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகின்றன என்று உணவியல் நிபுணர் பயல் சர்மா(senior dietician, Dharamshila Narayana Suprspecialty Hospital) கூறினார்.
அவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன, அவை ரத்த சர்க்கரை அளவு மெதுவாக அதிகரிக்க வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது.
* முழு வால்நட்ஸை தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
* அவற்றை முழுமையாக உலர வைக்கவும்
* இப்போது பருப்பை விரலில் வைத்து அழுத்தும் போது, வெளியே இருக்கும் தோல் எளிதில் உடைந்து பருப்பு வெளிவரும்
- கொதித்த பிறகு வால்நட் முழுவதுமாக உலர்த்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், என்று கபூர் வலியுறுத்தினார்.
முழு அக்ரூட் பருப்புகளையும் உடைக்க சரியான வழி என்ன?
மருத்துவ உணவியல் நிபுணர் கரிமா கோயலிடம் பேசினோம், அவர் பின்வரும் வழிகளைப் பகிர்ந்து கொண்டார்.
நட்கிராக்கர்
முழு அக்ரூட் பருப்புகளையும் உடைக்க நட்கிராக்கரைப் பயன்படுத்தலாம். க்ராக்கரில் வால்நட் வைத்து, அது உடையும் வரை மெதுவாக அழுத்தவும். உங்களிடம் நட்கிராக்கர் இல்லையென்றால், நீங்கள் ஒரு வைஸ் அல்லது கட்டிங் பிளேடு பயன்படுத்தலாம்.
கைகளைப் பயன்படுத்துவது
உங்கள் கைகளால் வால்நட்களை உடைப்பது சவாலானது, ஆனால் நீங்கள் இந்த முறையை முயற்சி செய்யலாம்.
உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் வால்நட் வைக்கவும், பின்னர் அழுத்தி கடினமான மேற்பரப்பில் உருட்டவும். உறுதியாக, அழுத்தும் போது ஷெல் உடையும்.
ஹீட்
வால்நட்டைக் கையால் உடைக்க முயற்சிக்கும் முன் கொதிக்க வைப்பது சற்று எளிதாக இருக்கும்.ஆனால் அது ஒரு உத்தரவாத முறை அல்ல.
சில நிமிடங்கள் கொதித்த பிறகு, உங்கள் கைகளைப் பாதுகாக்க ஒரு துண்டு அல்லது கையுறைகளைப் பயன்படுத்தி, அதை உடைக்க முயற்சிக்கவும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள், ஏனெனில் நட்ஸ் இன்னும் சூடாக இருக்கலாம், மேலும் ஷெல் எப்போதும் எளிதில் உடைந்து போகாது.
உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது உங்கள் விரல்களைப் பயன்படுத்தி ஷெல்லை உடைக்க முயற்சிக்கவும், என்று கோயல் கூறினார்.
Read in English: Useful hack to crack open walnuts with your bare hands
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.