பொதுவாக, ஒரு முட்டையில், ஒரு மஞ்சள் கரு மற்றும் ஒரு வெள்ளைக்கரு இருக்கும். இருப்பினும், நீங்கள் எப்போதாவது முட்டையில் இரண்டு மஞ்சள் கருவை பார்த்திருக்கலாம். இது கோழி’ ஒரே ஓட்டில் இரண்டு மஞ்சள் கருக்களை வெளியிடும் போது உருவாகிறது.
இரட்டை மஞ்சள் கருவைக் கொண்ட முட்டைகள் இளம் கோழிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஏனெனில் அவற்றின் இனப்பெருக்க அமைப்புகள் இன்னும் முழுமையாக முதிர்ச்சியடையவில்லை. அது மட்டுமல்ல, ஒரு கோழி அதன் இனப்பெருக்க சுழற்சியின் முடிவை நெருங்கும் போதும், அது இரட்டை மஞ்சள் கருவுடன் முட்டையிடலாம்.
மூடநம்பிக்கைகள்
முட்டையில் இரட்டை மஞ்சள் கரு ஒரு அசாதாரண நிகழ்வு, மேலும் அது பலருக்கு ஒரு அரிய காட்சியாகும், இது பல மூடநம்பிக்கைகளுடன் தொடர்புடையது. விக்கான் (Wiccan) நாட்டுப்புறக் கதைகளில், இரட்டை முட்டையின் மஞ்சள் கருவைப் பார்ப்பது ஒரு நல்ல அதிர்ஷ்டக் குறியீடாகக் கருதப்படுகிறது என்று பலர் நம்புகிறார்கள், ஏனெனில் இரட்டை மஞ்சள் கருவுடன் முட்டையைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் 1000 இல் 1 தான்.
அதே வேளையில், நார்வே புராணங்கள்படி, அத்தகைய முட்டையைப் பார்ப்பது அருகிலுள்ள அல்லது அன்பானவர்களின் மரணமாகக் கருதப்படுகிறது. மேலும், ரோமானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, குடும்பத்தில் யாராவது கர்ப்பமாக இருந்து, அத்தகைய ஒரு முட்டையைப் பார்த்தால், அது இரட்டையர்களின் வருகையைக் குறிக்கிறது.
சாப்பிடுவது பாதுகாப்பானதா?
நல்ல செய்தி என்னவென்றால், ஆம், அவை உட்கொள்வது பாதுகாப்பானது. நீங்கள் எப்போதாவது ஒரு முட்டையில் இரட்டை மஞ்சள் கருக்கள் மிதப்பதைக் கண்டால், அவற்றை ஒருபோதும் தூக்கி எறிய வேண்டாம். அவை ஒரே ஒரு மஞ்சள் கரு கொண்ட முட்டையை விட’ வேறுபட்ட வெள்ளை-மஞ்சள் கரு விகிதத்தைக் கொண்டுள்ளன!
மேலும், இரட்டை மஞ்சள் கரு உள்ள முட்டையில், வழக்கமான முட்டையை விட புரதம், கொலஸ்ட்ரால் மற்றும் பிற சத்துக்கள் இரட்டிப்பாக உள்ளது. எனவே, அடுத்த முறை நீங்கள் இரட்டை மஞ்சள் கரு முட்டையைக் கண்டால் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் மஞ்சள் கருக்கள் இருக்க முடியுமா?
இரட்டை முட்டையின் மஞ்சள் கருவைக் கண்டுபிடிப்பது அதிர்ஷ்டம் என்று நீங்கள் நினைத்தால், 2 மஞ்சள் கருக்களுக்கு மேல் உள்ள முட்டை எப்படி இருக்கும்?
நாம், ஒரு முட்டையில் 2 மஞ்சள் கருக்களைக தான் வழக்கமாக பார்த்துள்ளோம். ஆனால், மூன்று மற்றும் நான்கு மடங்கு மஞ்சள் கரு முட்டைகளும் உள்ளன. கின்னஸ் உலக சாதனையின் படி, ஜூலை 1971 இல், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹைன்ஸ்வொர்த் கோழிப்பண்ணையைச் சேர்ந்த டயான் ஹெயின்ஸ்வொர்த் என்ற பெண், ஒன்பது மஞ்சள் கருக்கள் கொண்ட ஒரு முட்டையை கண்டுபிடித்தார்.
அவை ஏன் விற்கப்படவில்லை?
இதற்கு எளிய காரணம் என்னவென்றால், நுகர்வோர் அதிக ஆரோக்கிய உணர்வுடன் இருக்கிறார்கள் மற்றும் புரதத்தைத் தவிர, இரட்டை மஞ்சள் கரு முட்டையில் கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே, பண்ணைகள் உண்மையில் அவற்றைத் தனித்தனியாக பேக்கேஜ் செய்து பின்னர் விற்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“