Try this effective solution to clean copper and brass utensils
விதவிதமான பாத்திரங்கள் சந்தையில் இருந்தாலும், சிலர் உணவை சமைக்கவும் பரிமாறவும் செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களைப் விரும்புகிறார்கள்.
Advertisment
செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் உணவுகளை சமைத்து சேமித்து வைப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை சுத்தம் செய்யும் போது அவை சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
இந்த பாத்திரங்கள் சிறிது காலம் கழித்து கருப்பாக மாறிவிடும். மேலும் சோப்பு கொண்டு கழுவுவது அவற்றின் அசல் நிறத்திற்கு கொண்டு வர உதவாது. எந்த அளவு ஸ்க்ரப்பிங் செய்தாலும் பாத்திரங்களின் நிறம் மாறாது.
ஆனால் இதற்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது.
Advertisment
Advertisements
இந்த ஹேக்கை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன், இந்த பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகளை முதலில் புரிந்துகொள்வோம்.
செம்பு அல்லது பித்தளை பாத்திரங்களில் தயாரிக்கப்படும் அல்லது சேமித்து வைக்கப்படும் உணவு அல்லது தண்ணீரில், பூஞ்சை வளர்ச்சி இருக்காது. உலோகங்களின் பாதுகாப்பு விளைவு இதற்கு காரணமாகும்.
அவை அழற்சி எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கின்றன, அதாவது கீல்வாதம், வீக்கமடைந்த மூட்டுகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்களுக்கு இவை உதவுகின்றன. எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காப்பர் பாட்டில்களில் சேமிக்கப்படும் தண்ணீர் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
இ.கோலை, எஸ். ஆரியஸ் மற்றும் காலரா பேசிலஸ் ஆகியவற்றுக்கு எதிராக காப்பர் பயனுள்ளதாக இருக்கும், என்று ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான ஜோதி பட் கூறினார்.
இப்போது தீர்வுக்கு வருவோம்:
ஃபுட் விலாகர் ரேஷு செம்பு மற்றும் பித்தளைப் பொருட்களைச் சுத்தம் செய்வதற்கான எளிதான, பயனுள்ள உதவிக்குறிப்பை யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
இந்த கரைசலைத் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் சம அளவு சிட்ரிக் அமிலம் (எலுமிச்சை) மற்றும் உப்பு போடவும். பிறகு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, உப்பு முழுவதுமாக கரையும் வரை நன்கு கலக்கவும்.
இப்போது, சின்ன தட்டுகள், பூஜை சாமான்கள் போன்ற செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய, அவற்றை சில நிமிடங்கள் கரைசலில் நனைத்து, வழக்கமான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவவும்.
பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களைப் பொறுத்தவரை, கரைசலை உள்ளே ஊற்றி, சில நிமிடங்களுக்கு அவற்றை நன்கு குலுக்க வேண்டும். பாத்திரங்கள் சில நிமிடங்களில் அவற்றின் அசல் பிரகாசத்தையும் நிறத்தையும் பெறும்.
இதை ஒப்புக்கொண்ட பட், இது செப்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான பாரம்பரிய மற்றும் எளிதான முறையாகும். இந்த இரண்டு பொருட்கள் எந்த சமையலறையிலும் எளிதாகக் கிடைக்கும். எலுமிச்சம்பழம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக வினிகரைப் பயன்படுத்தலாம், என்றார்.
உணவுப் பொருட்களை செம்பு அல்லது பித்தளை பாத்திரங்களில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சேமித்து வைக்கக்கூடாது, ஏனெனில் உலோகத்துடன் சேர்ந்து உணவுபொருட்களில் அமில எதிர்வினை ஏற்படுகிறது என்று ரேஷூ கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“